யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம்

யாழ் விமான நிலைய திறப்பு விழா 17ம் திகதி

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் எதிர்வரும் 17ம் திகதி உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்படவுள்ளது.

எனினும் சென்னைக்கான விமான சேவைகள் எதிர்வரும் 27ம் திகதி முதல் வழமையான பயணத்தை ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்று சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் அதிகாரி தெரிவித்துள்ளார்

இது தொடர்பில் அரச தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

எதிர்வரும் 17ம் திகதி வியாழக்கிழமை முற்பகல் 10 மணிக்கு யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஆரம்பித்துவைக்கப்படும்.

சென்னையிலிருந்து முதலாவது விமானம் அலையன்ஸ் எயார் (alliance air) விமானம் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு வரவுள்ளது.

இதையும் பாருங்க :

ஜப்பானில் புயல், மழையால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 42 ஆக உயர்வு

சீமானை தேசதுரோக வழக்கில் கைது செய்க.. காங்கிரஸ் மனு

“கீழடி அகழாய்வு பகுதியை இனிமேல் பொதுமக்கள் பார்வையிட முடியாது”

இதில் இந்திய சிவில் விமான சேவை அதிகாரிகளின் குழுவினர் வருகைதருகின்றனர்.

இந்த விமானத்தில் விமானத்துறையைச் சார்ந்த அழைக்கப்பட்ட விருந்தினர்கள் இந்தியாவில் இருந்து அழைத்து வரப்படவுள்ளனர்.

எனினும் சென்னைக்கான விமான சேவைகள் எதிர்வரும் 27ம் திகதி முதல் ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, விமான நிலையத்தின் உத்தியோகபூர்வமாக திறப்பு விழாவில் கலந்து கொள்ளுமாறு போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் அழைப்புவிடுத்துள்ளார்.

இதையும் பாருங்க :

ஜப்பானில் புயல், மழையால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 42 ஆக உயர்வு

சீமானை தேசதுரோக வழக்கில் கைது செய்க.. காங்கிரஸ் மனு

“கீழடி அகழாய்வு பகுதியை இனிமேல் பொதுமக்கள் பார்வையிட முடியாது”

About அருள்

Check Also

தாக்கப்பட்டாரா அர்ச்சுனா எம்.பி – நாடாளுமன்றத்தில் களேபரம்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேரா தம்மைத் தாக்கியதாக யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றுக்கு தெரிவாகியுள்ள வைத்தியர் ராமநாதன் …