கமல்ஹாசன்

தேமுதிகவை சீண்டிய கமல்ஹாசன்? ஒரே பேட்டியால் கொந்தளிப்பு

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

வாரிசு அரசியலை எல்லாம் நான் செய்யமாட்டேன் என கமல்ஹாசன் கூறியது திமுக மற்றும் தேமுதிகவினரிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

மக்களவை தேர்தலுக்காக அதிமுக பாஜகவிற்கு 5 தொகுதியும், பாமகவிற்கு 7 தொகுதியும் ஒதுக்கியுள்ளது. தேமுதிக உடனான பேச்சுவார்த்தை இழுபறியில் உள்ளது.

திமுக காங்கிரசுடன் கூட்டணியை உறுதி செய்து 20 தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கும் 20 தொகுதிகளில் திமுகவும் நிற்க உள்ளது.

அதிமுக, திமுக கூட்டணிகள் கிட்டத்தட்ட தொகுதி உடன்பாடுகளை முடிந்துவிட்ட நிலையில் அமமுக, மக்கள் நீதி மய்யம், போன்ற கட்சிகள் அடுத்த என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்று தெரியாமல் இருக்கிறது.

இந்நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் பேசுகையில் எனக்கு பிறகு என் பதவிக்கு என் மகள்களோ, மைத்துனரோ வரமாட்டார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டியதில்லை. குடும்ப அரசியல் என்பது இருக்கக்கூடாது. அதேபோல் நான் தமிழன், தமிழை, தமிழ் மண்ணை காக்க எனக்கு ஓட்டுபோடுங்கள் என கூறுவதும் ஒரு வித குடும்ப அரசியல் தான்.

குடும்ப அரசியல் என்று கமல் ஸ்டாலினை கூறினாரா அல்லது விஜயகாந்தை சொன்னாரா என தெரியவில்லை. ஆனால் கமல் சீமானை வம்பிழுத்துள்ளார் என தெள்ளத்தெளிவாக தெரிகிறது.

About அருள்

Check Also

தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறிய 8,000 பேர் கைது

தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறிய 8,000 பேர் கைது

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!8Sharesதமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறிய 8,000 பேர் கைது கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க …