லஷ்மி ராமகிருஷ்ணனை நம்பி ஏமாந்த மக்கள்

லஷ்மி ராமகிருஷ்ணனை நம்பி ஏமாந்த மக்கள் – தங்க நகை சீட்டு மோசடி !

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

சென்னையில் உள்ள பிரபல தங்க நகைக்கடையான கே எஃப் ஜே தங்க நகை சீட்டு என்ற பெயரில் மோசடியில் ஈடுபட்டுள்ளது.

சென்னை மயிலாப்பூர், அண்ணாநகர், புரசைவாக்கம் , வளசரவாக்கம் ஆகிய பகுதிகளில் கிளை பரப்பியுள்ளது கேரளா பேஷன் ஜுவல்லரி என்ற நிறுவனம். இந்த நிறுவனம் நஷ்டத்தில் இயங்குவதாக சொல்லப்படுகிறது. இதனால் தங்க நகைக்கடன் சீட்டு திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியது. இதன் விளம்பரத் தூதுவராக சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிப் லஷ்மி ராமகிருஷ்ணன் நடித்திருந்தார்.

இதனால் கவரப்பட்ட அப்பாவி மக்கள் 1999 ரூபாய் செலுத்தி தங்க நகை சேமிப்பு திட்டத்தில் உறுப்பினராக சேர்ந்து மாதாமாதம் பணம் கட்டி வந்தனர். இதனால் நஷ்டத்தில் இயங்கிய கேரள பேஷன் ஜூவல்லரிக்கு 17 கோடி ரூபாய் வசூலானதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் சீட்டு காலம் முடிந்தவர்களுக்கு முதிர்வுக் காசோலை வழங்கப்ட்டுள்ளது. அவற்றை வங்கியில் செலுத்திய மக்கள் கே எஃப் ஜே கணக்கில் பணம் இல்லாததால் செக் பவுன்ஸ் ஆனதைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதனை அடுத்து மக்கள் இதுகுறித்து புகாரளிக்க பணத்தைத் திருப்பி அந்தக் கடையின் முதலாளி சுனில் செரியன் திருப்பித் தருவதாக சொல்லி இழுத்தடித்து வந்துள்ளார். மேலும் வங்கிகளுக்குக் கட்டவேண்டிய தொகைக்காக அவரிடம் இருந்த 55 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகளை வங்கிகள் முடக்கி விட்டதாக சொல்லப்படுகிறது. இந்தக் கடையில் விளம்பரத்தில் லஷ்மி ராமகிருஷ்ணன் நடித்ததாலேயே நாங்கள் பணம் கட்டினோம் என பெண்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதையும் பாருங்க :

இலங்கை

தமிழகம்

இன்றைய ராசிபலன்

உலக செய்திகள்

https://youtu.be/xaC9jhrSiH0

About அருள்

Check Also

தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறிய 8,000 பேர் கைது

தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறிய 8,000 பேர் கைது

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!8Sharesதமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறிய 8,000 பேர் கைது கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க …