LIVE NOW
By-election 2019 Voting LIVE Updates: விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்
விக்கிரவாண்டி, நாங்குநேரி, காமராஜர் நகர் ஆகிய மூன்று தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நேரம் முடிவடைந்தது, வரிசையில் நிற்பவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டுள்ளது.
தேர்தல் அதிகாரி ஜான் கேப்ரியல் அளித்த புகாரின் அடிப்படையில் நாங்குநேரி தொகுதிக்குள் நுழைந்ததாக வசந்தகுமார் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது
நான்குநேரி சட்டமன்ற தொகுதியில் வாக்கு பதிவு 62.32 சதவீதம்
விழுப்புரம்: விக்கிரவாண்டி தொகுதியில் 5.00 மணி நிலவரப்படி 76.41% வாக்குப்பதிவு
நாங்குநேரியின் கலங்குடி என்ற இடத்தில் அனுமதியின்றி நுழைந்ததாக வசந்தகுமார் எம்பியிடம் போலீசார் விசாரணை
நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பட்டர்பிள்ளை புதூரில் பறக்கும்படையினர் வாகனச்சோதனையில் ஈடுபட்டபோது சொகுசுகாரில் சென்னையை சேர்ந்த சத்தியேந்திரன் என்பவரிடமிருந்து கணக்கில்வராத ₹1,66,740 ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது
1 மணி நிலவரப்படி… வாக்குப்பதிவு நிலவரம்
விக்கிரவாண்டி: 54.17%
நாங்குநேரி: 41.35%
காமராஜ் நகர் : 42.71%
மழையிலும் வாக்களிக்கும் மக்கள் |புதுச்சேரி மாநிலத்தில் உள்ள காமராஜ் நகர் தொகுதியில் 32 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. காலை முதல் 9 மணி வரை அங்கு லேசான மழை பெய்து கொண்டிருந்தது. இருப்பினும் மழையை பொருட்படுத்தாமல் மக்கள்,ஆர்வத்துடன் வந்து வாக்களிக்க வந்தனர்.
1:21 pm (IST)
நாங்குநேரியில் பணம் பறிமுதல் |
நாங்குநேரி தொகுதிக்குட்பட்ட பட்டப்பிள்ளை புதூரில் ஒரு லட்சத்து 67 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. உரிய ஆவணங்கள் இல்லாததால் தேர்தல் பறக்கும் படை அதிகாரி தலைமதி பணத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார். பணத்தை திருப்பித் தர வேண்டும் என கூறி அதிமுக பிரமுகர் பரமசிவம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பறிமுதல் செய்த பணத்தை காவல்துறையினரிடம் தேர்தல் அதிகாரிகள் ஒப்படைக்க உள்ளனர்.
11:51 am (IST)
பழுதான வாக்குப்பதிவு எந்திரங்கள்…. 40 நிமிடங்கள் வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டது
11:41 am (IST)
நாங்குநேரி தொகுதியில் காலை 11 மணி நிலவரப்படி 23.89% வாக்குகள் பதிவாகியுள்ளன
11:40 am (IST)
புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியில் காலை 11 மணி நிலவரப்படி 28.17% வாக்குகள் பதிவாகியுள்ளன
11:13 am (IST)
விக்கிரவாண்டி தொகுதியில் 11.00 மணி நிலவரப்படி 32.54% வாக்குகள் பதிவு
11:09 am (IST)
வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்று வருகிறது – தேர்தல் அதிகாரி
10:57 am (IST)
புதுச்சேரி – காமராஜ் நகர் தொகுதிக்குட்பட்ட சாமிபிள்ளை தோட்டம் பகுதியில் காங்கிரஸ் சார்பில் ரூ.5000 டோக்கன் வழங்கியதாக எதிர்கட்சிகள் கொடுத்த புகாரையடுத்து 4 பேர் மீது ஜாமீனில் வெளிவரமுடியாத பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
10:44 am (IST)
புதுச்சேரி: காமராஜ் நகர் தொகுதியில் 10 மணி நிலவரப்படி 11.60% வாக்குகள் பதிவாகியுள்ளன; காமராஜ் நகர் தொகுதியில் உள்ள 35,009 வாக்குகளில் இதுவரை 4,060 வாக்குகள் பதிவாகியுள்ளன
10:40 am (IST)
புதுச்சேரி: காமராஜ் நகர் தொகுதியில் 10 மணி நிலவரப்படி 11.60% வாக்குப்பதிவு
10:24 am (IST)
புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலை கருவடிக்குப்பத்தில் அதிமுக எம்எல்ஏ அன்பழகன், என்.ஆர்.காங் வேட்பாளர் புவனேஸ்வரன் தலைமையில் மறியல்; காங்கிரஸ் சார்பில் 5000 ரூபாய்கான டோக்கன் வழங்குவதாக புகார். புதுச்சேரி சாமிப்பிள்ளை தோட்டம் பகுதியில் வாக்காளர்களுக்கு வழங்கப்படவிருந்த டோக்கன்களை தேர்வுத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்
10:19 am (IST)
நாங்குநேரி அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் பேட்டி |
நாங்குநேரி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் தனது வாக்கினை ரெட்டியார் பெட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி வாக்குச் சாவடியில் தனது குடும்பத்தினருடன் சென்று பதிவு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் மண்ணின் மைந்தன் ஆகிய நான் என் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வருகிறேன் ஆகவே மக்களின் ஆதரவோடு நிச்சயம் வெற்றி பெறுவேன் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். என்னை எதிர்த்துப் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் இந்த தொகுதியில் தனது வாக்கினை கூட பதிவு செய்ய முடியாமல் இருக்கிறார் அப்படி இருக்கும் போது அவரால் மக்களுக்கு என்ன நலத்திட்டங்களை செய்ய முடியும். அவர் வெளியூர் வேட்பாளர் என்று கூறியுள்ளார்
படிக்க:
பிக் பாஸ் – 3 கசப்பா ? கவின் – லாஸ்லியா பெயர்’ என் நாவில் வராது – இயக்குநர் சேரன் டுவீட்