திமுக, தினகரன் கட்சிகளுடன் கூட்டணி இல்லை

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி வரும் பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுமா? அல்லது கூட்டணி வைத்து போட்டியிடுமா? என அக்கட்சியின் நிர்வாகிகளுக்கே புரியாத புதிராக உள்ளது

கடந்த சிலநாட்களுக்கு முன் ஒருசில அரசியல் கட்சிகளுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கமல் பேட்டியளித்தார். ஆனால் அதன் பின் எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லை. 40 தொகுதிகளிலும் தனித்து போட்டி என்ற ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.

இந்த நிலையில் தற்போது மக்கள் நீதி கட்சியின் செய்தி தொடர்பாளரும் கவிஞருமான சினேகன் கூறியபோது, திமுகவுடன் கூட்டணி இல்லை என்பது போல் தினகரன் கட்சியுடனும் கூட்டணி இல்லை என்றும், தினகரன், தன்னைப் பாதுகாக்கவும், தன்னை அடையாளப் படுத்தவும் மட்டுமே கட்சி ஆரம்பித்துள்ளார்.

எனவே அவருடன் கூட்டணி வைக்க வாய்ப்பில்லை என்றார்.வைத்துள்ளதாகவும் கூறினார்.

மேலும் ஊழல் கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்று கூறும் கமல், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்க சம்மதம் தெரிவித்துள்ளார்.

அப்படியென்றால் காங்கிரஸ் கட்சி ஊழலே செய்யவில்லையா? என்ற கேள்விக்கு பதிலளித்த சினேகன், ‘பாஜகவை ஒப்பிடும் போது, காங்கிரஸ் ஊழல் கட்சியில் ஊழல் குறைவுதான் என்று பதிலளித்தார்

About அருள்

Check Also

ரஜினி

”ரஜினி-கமல் இணைவது மக்களுக்காக அல்ல”.. திருமா குற்றச்சாட்டு

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!6Sharesரஜினி-கமல் இணைவது நாட்டு மக்கள் பிரச்சனைக்காக அல்ல, தனிப்பட்ட பிரச்சனைக்காக தான் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் …