பருவமழை

வடகிழக்கு பருவமழை வரும் அக்.,17ம் தேதி துவங்க வாய்ப்பு

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

தமிழகத்திற்கு அதிக மழைப் பொழிவைத் தரும், வடகிழக்கு பருவமழை வரும் 17ம் தேதி தொடங்க வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அதன் இயக்குநர் பாலச்சந்திரன், கடந்த ஆண்டில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 24 சதவீதம் குறைவாக பெய்த நிலையில், நடப்பாண்டில் இயல்பான அளவிற்கு பொழியும் என தெரிவித்தார்.

இம் மாதம் 17 ஆம் தேதி தொடங்கும் வடகிழக்கு பருவமழை டிசம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில், 44 சென்டி மீட்டர் மழையை தமிழகத்திற்கு தரும் என எதிர்பார்ப்பதாகவும் பாலசந்திரன் தெரிவித்தார்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், வட தமிழகத்தின் உள்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இமயமலைக்கு புறப்பட்ட ரஜினிகாந்த் – 10 நாள் ஓய்வெடுக்க திட்டம்

About அருள்

Check Also

தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறிய 8,000 பேர் கைது

தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறிய 8,000 பேர் கைது

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!8Sharesதமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறிய 8,000 பேர் கைது கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க …