வந்த மண்ணிலும் சொந்தக் குரல்

வந்த மண்ணிலும் சொந்தக் குரல்….

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

“வந்த மண்ணிலும் சொந்தக் குரல்….”

தரணியின் மண்மீதிலும்
தயவான சொற்களோடே
தன்மானம் காத்திடுமே
தமிழனின் மொழியாகுமே…..

சொந்தக்குரலிலே நானும்
சோகத்தையே வார்த்தையிலே
சொல்லியே வாழந்திடுவேன்
சோதனையில் சாதனையாகவே…..

மண்போற்றும் மானிடரே
மறக்காமல் கேட்டிடுவீர்
மானங்கெட்ட மனிதரிடம்
மனிதநேயம் எங்கேயென….

வாழ்வான வாழ்வுதனை
வாழாமல் அலைபவனை
வாழ்க்கையென்னும் பாதையிலே
வாழவழி காட்டிடுவீர்…..
நம் சுவாசமும் தமிழ் பேசுமே
நாமாக நாமிருந்தே
நன்மைகள் விதைத்துவிட்டு
நம் மொழியை நாம் காப்போம்…..

நீர்வையூர்,
த.வினோத்..
யாழ்ப்பாணம்.

About அருள்

Check Also

உன் நினைவிலே நான்

உன் நினைவிலே நான்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!132Shares” உன் நினைவிலே நான்….” உன்னுடன் சேர்ந்தே உயிர் வாழ்ந்திடவே உனக்காகவே நானும் உயிர் வாழ்கின்றேனே…… உன்னை …