இரண்டு விபசார விடுதிகள் சுற்றிவளைக்கப்பட்டு எட்டு பெண்கள் கைது

இரண்டு

கல்கிஸ்ஸை பகுதியில் ஆயுர்வேத தசை பிடிப்பு நிலையம் என்ற போர்வையில் நடத்தி செல்லப்பட்ட இரண்டு விபசார விடுதிகள் சுற்றிவளைக்கப்பட்டு எட்டு பெண்களும், ஆண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ள இந்த பெண்கள்,மொரட்டுவை,கருவலகஸ்வெவ,கதிர்காமம்,பாதுக்கை,சாலியவெவ மற்றும் பண்டாரவளை பகுதிகளை சேர்ந்தவர்கள் என காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்டுள்ள நபர்,புத்தளம் பகுதியை சேர்ந்தவருடன்,அவர்கள் இன்றைய தினம் கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

Read More »

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உயர்நீதிமன்றில் மனு தாக்கல்!

உயிர்த்த ஞாயிறு

கடந்த ஏப்ரல் 21ம் திகதி நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலுக்கு வழிசமைத்து, காவற்துறை மா அதிபரும் முன்னாள் பாதுகாப்பு செயலாளரும் பொதுமக்களின் அடிப்படை உரிமையை மீறி இருப்பதாக தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனு, எதிர்வரும் 31ம் திகதி உயர் நீதிமன்றினால் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. இந்த மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ள காவற்துறை மா அதிபர் மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஆகியோர் இன்று நீதிமன்றில் முன்னிலையாகி இருக்கவில்லை. எனினும் அவர்கள் சார்பில் …

Read More »

வலியின் சுகங்கள் -01

வலியின் சுகங்கள்

உயிரில் கலந்த வலியின் சுகங்கள் ************************************* அன்பு கொண்ட அழகான சிறு குடும்பத்திலே ஐந்து பிள்ளைகளில் முதலாவது மகளாக பிறந்த கருமை அழகியே எம் கதையின் நாயகி ஜெறோசி. அவள் அனைவர் மீதும் அன்பாக இருப்பவள் . வறுமையான குடும்பம் என்பதினால் சிறு வயதில் இருந்தே தாய் தந்தையுடன் இணைந்து தானும் பல வேலைகளை செய்து கஷ்டப்பட்டே தனது கல்வியை தொடர்ந்த வண்ணம் தனது இரு சகோதரர்களையும் இரு சகோதரிகளையும் …

Read More »

இன்றைய ராசிப்பலன் 22 வைகாசி 2019 புதன்கிழமை

இன்றைய ராசிப்பலன்

இன்றைய பஞ்சாங்கம் 22-05-2019, வைகாசி 08, புதன்கிழமை, சதுர்த்தி திதி பின்இரவு 02.41 வரை பின்பு தேய்பிறை பஞ்சமி. பூராடம் நட்சத்திரம் பின்இரவு 05.13 வரை பின்பு உத்திராடம். நாள் முழுவதும் அமிர்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. சங்கடஹர சதுர்த்தி. விநாயகர் வழிபாடு நல்லது. இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள் …

Read More »

விடுதலைப் புலிகளின் சீருடையுடன் கூடிய எலும்புக்கூடு மீட்கப்பட்ட இடத்தில் அகழ்வுப் பணி

அகழ்வுப் பணி

முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் 681வது படை தலைமையகத்துக்கு அருகில் உள்ள காணியில், தமிழீழ விடுதலைப் புலிகளின் சீருடையுடன் எலும்புக்கூடு ஒன்று மீட்கப்பட்ட இடத்தில், நீதிமன்ற அனுமதியுடன் தற்போது அகழ்வுப் பணி இடம்பெற்று வருவதாக எமது செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதவான் எஸ் லெனின்குமார் முன்னிலையில் இந்த பணி இடம்பெற்று வருகின்றது. அங்கு தடயவியல் பிரிவினரும் பிரசன்னமாகியுள்ளதாக எமது செய்தி தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார். கடந்த 17ஆம் திகதி …

Read More »

கோட்டாபயவிற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

கோட்டாபய

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட மூன்று பேருக்கு எதிராக சட்ட மா அதிபர் திணைக்களம் தொடர்ந்திருந்த வழக்கினை, நிரந்தர நீதாய மேல் நீதிமன்றம் இந்த மாதம் 30ம் திகதி வரையில் ஒத்திவைத்துள்ளது. முன்னைய அரசாங்க காலப்பகுதியில், டீ.ஏ.ராஜபக்ஷ நினைவு நூதனசாலை நிர்மாணத்திற்கு 34 மில்லியன் ரூபாய் அளவான அரச நிதி பயன்படுத்தப்பட்டமைக்கு எதிராக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.

Read More »

ஐ.தே.கட்சிக்கு புத்துயிர் அளிக்கவே ஜே.வி.பியின் அவநம்பிக்கை பிரேரணை – பொதுஜன முன்னணி

புத்துயிர்

பலவீனமடைந்துள்ள ஐக்கிய தேசிய கட்சிக்கு புத்துயிர் அளிக்கவே ஜேவிபியினால் அரசாங்கத்திற்கு எதிராக அவநம்பிக்கை பிரேரணை கொண்டு வரப்படுவதாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன இதனை தெரிவித்துள்ளார். ஒவ்வொரு தடவையும் ஐக்கிய தேசிய கட்சி பலமடைந்து செல்கின்ற போது, அந்த கட்சியை மீள கட்டியெழுப்புவதற்கான வேளைகளை ஜேவிபியே மேற்கொண்டு வருகிறது. அந்தவகையிலேயே …

Read More »

பிரதமர் ரணிலுக்கு எதிரான மனு நிராகரிப்பு

பிரதமர்

பிரதமர் ரணில் விக்ரசிங்கவின் நாடாளுமன்ற உறுப்புரிமையை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமல் நிராகரித்தது. கொழும்பு மாநகரசபை உறுப்பினர் ஷர்மிளா கோணவல இதனைத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு கடந்த முறை பரிசீலிக்கப்பட்ட போது, அதற்கு அடிப்படை எதிர்ப்பை வெளிப்படுத்திய பிரதமர் தரப்பு சட்டத்தரணிகள், இந்த மனுவில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கான மூலாதாரங்கள் முன்வைக்கப்படவில்லை என்பதால், இது குறித்து விசாரணை செய்யும் அதிகாரம் …

Read More »

பயங்கரவாதிகளுடன் நெருங்கிய தொடர்புடைய மூவர் சற்றுமுன்னர் அதிரடியாக கைது

பயங்கரவாதிகளுடன்

ஈஸ்டர் ஞாயிறு இடம்பெற்ற பயங்கரவாத தற்கொலை குண்டுதாரிகளுடன் நெருங்கிய தொடர்புடைய மூன்று பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த மூவரும் இன்று (திங்கட்கிழமை) அம்பாறை – கல்முனையில் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். அவர்கள் தற்கொலைத் தாக்குதல்களுடனும் நேரடி தொடர்பு கொண்டவர்கள் என்று சந்தேகம் எழுந்துள்ளதாகவும் இவர்கள் புலனாய்வுப் பிரிவுகளால் கிடைக்கப்பெற்ற தகவலினை அடுத்தே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் மேலும் கூறியுள்ளார். எனவே …

Read More »

பயங்கரவாதிகளின் மேலும் ஒரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு

பயிற்சி முகாம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொர்புடைய பயங்கரவாதிகள் பயிற்சி பெற்றதாக சந்தேகிக்கப்படும் மேலும் ஒரு முகாம் குருநாகல் – அலகோலதெனிய பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அங்கு தெங்கு காணியொன்றில் இவ்வாறு அவர்கள் பயிற்சி முகாமை நடத்தி சென்றுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர், காவல்துறை அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். சம்பவம் தொடர்பில் ஏற்கனவே 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More »