முன்னாள் பாதுகாப்பு பிரதானிகளின் தயாரிக்கப்பட்ட நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமைகள் மற்றும் தேசிய பாதுகாப்பிற்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த முன்மொழிவுகள் உள்ளடங்கிய அறிக்கையை எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் நேற்ற கையளித்தார். குறித்த அறிக்கை எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டிருந்த நிலையில், ஜனாதிபதி செயலகத்தில் வைத்து, குறித்த அறிக்கையை அவர் ஜனாதிபதியிடம் கையளித்துள்ளார். முன்னாள் பாதுகாப்பு பணிக்குழாம் பிரதானி ஜகத் ஜயசூரிய, முன்னாள் …
Read More »சஹ்ரானின் மனைவி வழங்கிய வாக்குமூலம்..
இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் பிரதான சூத்திரதாரியான மொஹமட் சஹ்ரான், கொழும்பின் சில இடங்களில் தங்கியிருந்துள்ளார் என பாதுகாப்புத் தரப்பினர் தகவல் வெளியிட்டுள்ளனர். சாய்ந்தமருதில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் காயமடைந்த அவரின் மனைவியிடம் பெற்றுக்கொள்ளப்பட்ட வாக்குமூலத்தில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது. அம்பாறை மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவரும் அவரிடம், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் வாக்குமூலங்களைப் பதிவுசெய்துள்ளனர். அவரும், சஹரானும் கொழும்பில் சில இடங்களில் முன்னர் தற்காலிகமாக தங்கியிருந்துள்ளனர் என்ற …
Read More »யாழ்.நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கோட்டாவுக்கு மீண்டும் அழைப்பாணை!
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸவை எதிர்வரும் ஜூன் மாதம் 21ம் திகதி யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு மீண்டும் அழைப்பாணை வௌியிடப்பட்டுள்ளது. கடந்த 2011ம் ஆண்டு டிசம்பர் மாதம் 9ம் திகதி லலித்குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சாட்சி வழங்க முன்னாள் பாதுகாப்பு செயலாளர் இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளார். இன்றைய தினம் குறித்த வழக்கு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் …
Read More »யாழ்ப்பாணம் நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு
இராணுவத்தினரால் நேற்று கைது செய்யப்பட்ட யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோரை எதிர்வரும் 16ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் நேற்றிரவு உத்தரவிட்டது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகம் இராணுவத்தினர், சிறப்பு அதிரடிப்படையினர் மற்றும் காவல்துறையினரால் நேற்றைய தினம் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதன்போது பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அறையிலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் மாவீரர்களின் ஒளிப்படங்கள் என்பன கைப்பற்றப்பட்டன. …
Read More »இன்றைய ராசிப்பலன் 04 வைகாசி 2019 சனிக்கிழமை
இன்றைய பஞ்சாங்கம் 04-05-2019, சித்திரை 21, சனிக்கிழமை, அமாவாசை திதி பின்இரவு 04.15 வரை பின்பு வளர்பிறை பிரதமை. அஸ்வினி நட்சத்திரம் பகல் 03.47 வரை பின்பு பரணி. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 0. சர்வ அமாவாசை. அக்னி நட்சத்திரம் ஆரம்பம் பின்இரவு 02.49 மணிக்கு. இராகு காலம் – காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, …
Read More »யாழில். கைதுசெய்யப்பட்ட மாணவர்களை பயங்கரவாத தடைப்புச் சட்டத்தின்கீழ் தடுத்துவைத்து விசாரிக்க நடவடிக்கை
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் எம்.திவாகரன், செயலாளர் எஸ்.கபில்ராஜ் ஆகிய இருவரையும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்துவைத்து விசாரணை நடத்த (DO) பாதுகாப்பு அமைச்சுக்கு கோப்பாய் பொலிஸார் விண்ணப்பித்துள்ளனர். “யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் இன்று சுற்றிவளைப்புத் தேடுதல் முன்னெடுக்கப்பட்டது. இராணுவத்தினர், சிறப்பு அதிரடிப் படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து இந்த நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர். இதன்போது பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மாணவர் ஒன்றியத்தின் அலுவலகம் சோதனையிடப்பட்டது. இதன்போது தமிழீழ …
Read More »2500 சிம் அட்டைகளுடன் சந்தேகநபரொருவர் கைது
திக்வெல்ல – யோனகபுர பிரதேசத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 2500 சிம் அட்டைகளுடன் முஸ்லிம் இளைஞரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பின்னர் திக்வெல்ல காவற்துறையில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். தான் சிம் விற்பனை பிரதிநிதியொருவராக செயற்பட்டவர் என குறித்த நபர் விசாரணையின் போது தெரிவித்துள்ளார். எனினும் , அது தொடர்பில் விடயங்களை உறுதிப்படுத்தி கொள்ள முடியாமையினால் திக்வெல்ல காவற்துறையினர் சந்தேகநபரிடம் தொடர்ந்தும் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். 2500 …
Read More »ஈய குண்டுகளுடன் ஒருவர் கைது
காலி கோட்டை அருகாமையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 669 ஈய குண்டுகளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். காலி காவற்துறை மற்றும் கடற் படையினர் இணைந்து சுற்றிவளைப்பினை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதன்போது சந்தேகத்திற்கிடமான வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் சோதனைக்குள்ளாக்கப்பட்டது. முன்னாள் போராளி அஜந்தனை விடுதலை செய்யுங்கள் – கொதித்தெழுந்த இரா – சம்பந்தன்
Read More »முன்னாள் போராளி அஜந்தனை விடுதலை செய்யுங்கள் – கொதித்தெழுந்த இரா – சம்பந்தன்
மட்டக்களப்பு – வவுணத்தீவில் வைத்து காவல் துறை உத்தியோகத்தர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டும் பிரிதொரு காவல் துறை உத்தியோகத்தர் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட கதிர்காமதம்பி இராசகுமாரன் என அழைக்கப்படும் அஜந்தனை விடுதலை செய்ய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமிழ் தேசிய கட்சியின் தலைவரும் முன்னாள் எதிர்கட்சி தலைவருமான இரா சம்பந்தன் பாதுகாப்பு செயலாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். பாதுகாப்பு செயலாளர் கோட்டாகொடவிடம் கடிதம் ஒன்றின் மூலம் அவர் …
Read More »முஸ்லிம் பாடசாலை மாணவர்களுக்கான அறிவித்தல்
முஸ்லிம் பாடசாலைகளின் இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் ஜுன் மாதம் 10ம் திகதி ஆரம்பமாகும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அடுத்த வாரத்துடன் நோன்பு காலம் ஆரம்பிக்கின்ற நிலையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 17ம் திகதியே முஸ்லிம் பாடசாலைகள் இரண்டாம் தவணைக்காக ஆரம்பமாகவிருந்தன. எனினும் 21ம் திகதி இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதல்களை அடுத்து நாட்டின் அனைத்து பாடசாலைகளுக்குமான விடுமுறைகள் நீடிக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் நோன்பு …
Read More »
Tamilpriyam | Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamil nadu News | Sri Lankan Tamil News Tamil News,Online Tamil News,Tamil News Live,Tamilnadu News,Oneindia Tamil,live tamil news Portal,online tamil news,Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil,all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology,online tamil news, tamil news portal, tamil actors, tamil actresses, astrology news in tamil, chennai news,