ரஞ்சித் ஆண்டகையின் கோரிக்கை

ரஞ்சித்

இன்றைய ஆராதனைகளை வீடுகளில் இருந்து மேற்கொள்ளுமாறு கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மக்களை கோரியுள்ளார். நாட்டின் தற்போதைய சூழ்நிலையை கருத்திற் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையினால் முன்னெடுக்கப்படும் ஆராதனைகளை இன்று காலை எட்டு மணிமுதல் ஹிரு டி.வில் நேரடியாக ஒளிபரப்பட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Read More »

அதிகரித்த காற்று வீசக் கூடும்…

அதிகரித்த

வங்காளவிரிகுடாவை அருகில் ‘பொனீ’ என்ற சூறாவளி காரணமாக இன்று முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை மழை மற்றும் அதிகரித்த காற்று வீசக் கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. வளிமண்டளவியல் திணைக்களம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக, மத்திய, மேல், சப்ரகமுவ, தென், வடக்கு, வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில பகுதிகளில் 100 முதல் 150 மில்லிமீற்றர் மழை வீpழ்ச்சி பதிவாகக் கூடும் என …

Read More »

சிறுமியிடம் சில்மிஷம்… கம்பி எண்ணும் சைக்கிள் கடை அங்கிள்

சிறுமியிடம் சில்மிஷம்

திருச்சியில் தந்தை போல பழகி வந்த சைக்கிள் கடை அங்கிள் ஒருவர் 6 வது சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறித்தியது சர்ச்சையாகியுள்ளது. திருச்சியில் பீமநகரை சேர்ந்த 6 வயது சிறுமி தனது வீட்டில் அருகில் இருக்கும் சைக்கிள் கடை அங்கிளிடம் பழகி வந்துள்ளார். அவருக்கும் மகள் இல்லை என்பதால், சிறுமியின் பெற்றோரும் தைரியமாக இருந்துள்ளனர். ஆனால், அந்த நபர் சிறுமிக்கு ஐஸ்க்ரீம் வாங்கி தருவதாக கூறிவிட்டு அழைத்து சென்று, சிறுமிக்கு …

Read More »

இரு அமைப்புக்கள் தடை செய்யப்பட்டது

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

தேசிய தௌஹீட் ஜமாத் மற்றும் ஜமாத்தி மில்லத்து இப்ராஹீம் ஆகிய அமைப்புக்கள் இலங்கையில் தடை செய்யப்பட்ட அமைப்புகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. அண்மையில் இடம்பெற்ற தாக்குதல்களை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Read More »

தற்கொலை அங்கியை தயாரிப்பதற்காக பயன்படுத்தப்படும் பல பொருட்கள் மீட்பு..

மேலும் இருவர் கைது

அம்பாறை – நிந்தவூர் பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து தற்கொலை அங்கியை தயாரிப்பதற்காக பயன்படுத்தப்படும் இரும்பு உருண்டைகள் பொருத்தப்பட்ட தகடுகள் உள்ளிட்ட பல பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. காவற்துறை ஊடகப்பேச்சாளர் ருவான் குணசேகர இதனைத் தெரிவித்துள்ளார். இன்று மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு தேடுதலின் போது இவை மீட்கப்பட்டன. இதேவேளை, திருகோணமலை – நிலாவெளி – இரக்ககண்டி பகுதியில் கடற்படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது வெடிப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. உந்துருளியில் பயணித்த ஒருவரை சோதனைக்கு …

Read More »

இன்றைய ராசிப்பலன் 28 சித்திரை 2019 ஞாயிற்றுக்கிழமை

இன்றைய ராசிப்பலன்

இன்றைய பஞ்சாங்கம் 28-04-2019, சித்திரை 15, ஞாயிற்றுக்கிழமை, நவமி திதி இரவு 07.34 வரை பின்பு தேய்பிறை தசமி. அவிட்டம் நட்சத்திரம் பின்இரவு 05.17 வரை பின்பு சதயம். மரணயோகம் பின்இரவு 05.17 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. கரி நாள். புதியமுயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும். இராகு காலம் – மாலை 04.30 – 06.00, எம கண்டம் – பகல் 12.00 …

Read More »

பயண எச்சரிக்கையை புதுப்பித்துள்ள அமெரிக்கா!

அமெரிக்கா

இலங்கையில் உள்ள அமெரிக்க அரசாங்க அதிகாரிகளது பிள்ளைகளை இலங்கையில் இருந்து நாட்டுக்கு திருப்பி அனுப்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம், தமது பயண எச்சரிக்கையை புதுப்பித்துள்ளது. இதில் இலங்கையில் பயங்கரவாதிகளின் தாக்குதல் அச்சுறுத்தல் இருப்பதால், இலங்கையில் பணியாற்றுகின்ற அமெரிக்க அரசாங்க அதிகாரிகளது குடும்ப அங்கத்தவர்களான முன்பள்ளி மாணவர்கள் முதல் 12ம் தர மாணவர்கள் வரையானவர்களை, நாட்டில் இருந்து அமெரிக்காவிற்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பயங்கரவாதிகள் இலங்கையில் முக்கியமான இடங்களில் தாக்குதல் …

Read More »

சாய்ந்தமருது தாக்குதலில் பலியாகிய 6 பேர் தொடர்பில் வௌிவந்துள்ள தகவல்!

சாய்ந்தமருது

கல்முனை – சாய்ந்தமருது பிரதேசத்தில் தொடர்சியாக தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, காவற்துறை ஊடகப்பேச்சாளர் ருவாண் குணசேகர தெரிவித்துள்ளார். அங்கிருந்து 6 ஆண்களும், 3 பெண்களும், 6 சிறார்களுமாக மொத்தம் 15 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. அவர்களில் ஆறு பேர் தற்கொலை குண்டுதாரிகள் என்று நம்பப்படுகிறது. சம்பவம் இடம்பெற்ற பகுதியில் உள்ள வீடொன்றில் படுகாயமடைந்த பெண் ஒருவரும் குழந்தை ஒன்றும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். நேற்று இரவு அந்த …

Read More »

சாய்ந்தமருதைச் சேர்ந்த இருவர் கைது

சாய்ந்தமருதைச்

நேற்று இரவு முதல் இன்று காலைவரை ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்தபோது தம்புள்ள பொலிஸாரால் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது பலபிரதேசங்களைச் சேர்ந்த ஐந்து சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர். இந்நிலையில், தம்புள்ள பொருளாதார மத்திய நிலையத்திற்கு அருகில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டபோது சந்தேகத்திற்கிடமாக நாடமாடி இருவரை கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். குறித்த சந்தேகநபர்கள் கல்முனை – சாய்ந்தமருது பிரதேசத்தை சேர்ந்தவர்களென பொலிஸார் மேற்கொண்டு விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது. குறித்த …

Read More »

காத்தான்குடி பிரதேசம் சுற்றிவளைப்பு

காத்தான்குடி

மட்டக்களப்பு,காத்தான்குடி பிரதேசம் விசேட அதிரடிப் படை மற்றும் பாதுகாப்பு படையினரால் சுற்றி வளைக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். கல்முனை சாய்ந்தமருது பிரதேசத்தில் இடம்பெற்ற தற்கொலை மற்றும் தாக்குதல் சம்பவங்களில் 15 க்கும் மேற்பட்ட சடலங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில் கிழக்கு மாகாணத்தின் பிரதேசங்கள் பொலிஸார் மற்றும் பாதுகாப்பு தரப்பினரால் சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்நிலையில் காத்தான்பகுடி பிரதேசமும் பொலிஸார் மற்றும் இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல் இடம்பெற்று …

Read More »