சற்றுமுன்னர் பூகொடையில் வெடிப்பு சம்பவம்

வெடிப்பு சம்பவம்

பூகொடை பகுதியில் வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் சற்றுமுன்னர் இடம்பெற்றுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. பூகொடையில் அமைந்துள்ள நீதிமன்ற கட்டிடத்திற்கு அருகில் இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர். இந்த வெடிப்பு சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். இதேவேளை உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னர் நேற்று மாலை மற்றும் இரவும் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களின் போது 16 பேர் சந்தேகத்தின் …

Read More »

அரச தகவல் திணைக்களம் வௌியிட்டுள்ள விசேட அறிக்கை..!

மீண்டும் ஊரடங்கு சட்டம்

தேவையற்ற வதந்திகளாலும் தவறான தொலைபேசி அழைப்பினாலும் ஏமாற வேண்டாம் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கையொன்றை வௌியிட்டு பொதுமக்களிடம் கோரியுள்ளது. தற்போதைய நிலைமை குறித்து சரியான தகவல்களை பாதுகாப்பு பிரிவினர் வழங்கி வருவதாக அதன் பணிப்பாளர் நாலக கலுவெவ மேலும் தெரிவித்தார். இதேவேளை , கிடைக்கும் தகவல்களுக்கு அமைய வீதிகளை மூடி சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட காவற்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளதாக காவற்துறை ஊடக பேச்சாளர் , காவற்துறை அத்தியட்சகர் ருவான் …

Read More »

அனைத்து உதவிகளும் இலங்கைக்கு வழங்கப்படும் – உலகத் தலைவர்கள்

ஜனாதிபதி

தற்போதைய சந்தர்ப்பத்தில் தம்மால் இயலுமான அனைத்து உதவிகளையும் இலங்கைக்கு வழங்குவதாக ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் தொலைபேசி மூலம் உறுதிப்படுத்தியுள்ளனர். ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குடேரெஸ் நேற்று பிற்பகல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு விசேட தொலைபேசி அழைப்பொன்றை ஏற்படுத்தி, உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற துன்பியல் நிகழ்வு குறித்து தனது …

Read More »

யோகிபாபுவுக்கு தங்கையா யாஷிகா?

யோகிபாபுவுக்கு தங்கையா யாஷிகா

காமெடி நடிகராக இருந்து வரும் யோகிபாபு, ஹீரோவாக புரமோஷன் ஆகும் படம் ‘ஜாம்பி’. இந்த படத்தின் கதை இரவில் தொடங்கி காலையில் முடியும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. யோகிபாபுவின் நண்பர்கள் மூவர் மகாபலிபுரம் சாலையில் உள்ள ஒரு பேய்பங்களாவில் மாட்டிக்கொள்ள அவரை காப்பாற்ற செல்லும் யோகிபாபுவும் அந்த பங்களாவில் சிக்குகிறார். அதன் பின்னர் யோகிபாபு உள்ளிட்ட நால்வரையும் யாஷிகா எப்படி காப்பாற்றுகிறார் என்பதுதான் படத்தின் கதை. படத்தின் கிளைமாக்ஸில் யாஷிகா கேரக்டரில் …

Read More »

இலங்கையில் தாக்குதல் நடத்திய ஐ.எஸ்.தீவிரவாதிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள அனானி

இலங்கையில்

இலங்கையில் தாக்குதல் நடத்திய ஐ.எஸ்.தீவிரவாதிகளை எச்சரித்து, அனானி என்ற சர்வதேச இணைய முடக்கல் குழு செய்தி அனுப்பியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஆங்கிலத்தில் அனோனிமெஸ் என்று அறியப்படும் இந்த குழு வெளியில் புலப்படாமல் செயற்படுவதால், அநாமதேயமான குழு என்று அறியப்படுகிறது. அனானி என்று தமிழில் பெயர்படுத்தப்படும் இந்த குழுவை பல்வேறு தரப்பினரால் இணையவழி தீவிரவாதிகள் என்று விமர்சிக்கின்ற போதும், உலகெங்கிலும் இந்த குழுவுக்கு ஆதரவாளர்கள் பெருகி வருகின்றனர். 2012ம் ஆண்டு …

Read More »

படுக்கைக்கு அழைத்த உதவி இயக்குனரை படாதபாடுபடுத்திய துணை நடிகை!!!

படுக்கைக்கு

தன்னை படுக்கைக்கு அழைத்த உதவி இயக்குனரின் முகத்திரையை துணை நடிகை ஒருவர் கிழித்து தொங்கவிட்டுள்ளார். திரைத்துறையில் தற்போது நடிகைகள் தாங்கள் சந்தித்து வரும் பாலியல் தொல்லைகள் குறித்து தைரியமாக வெளியே சொல்லி வருகின்றனர். அந்த வகையில் மலையாள துணை நடிகை சஜிதா தான் சந்தித்த பாலியல் தொல்லை குறித்து ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தனக்கு கார்த்திக் என்ற உதவி இயக்குனர் போன் செய்து படம் ஒன்றில் நீங்கள் நடிக்கிறீர்களா என …

Read More »

இன்றைய ராசிப்பலன் 25 சித்திரை 2019 வியாழக்கிழமை

இன்றைய ராசிப்பலன்

இன்றைய பஞ்சாங்கம் 25-04-2019, சித்திரை 12, வியாழக்கிழமை, சஷ்டி திதி பகல் 12.46 வரை பின்பு தேய்பிறை சப்தமி. பூராடம் நட்சத்திரம் இரவு 08.37 வரை பின்பு உத்திராடம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1/2. சஷ்டி விரதம். முருக வழிபாடு நல்லது. இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் – …

Read More »

மீண்டும் ஊரடங்கு சட்டம்…!

மீண்டும் ஊரடங்கு சட்டம்

நாடு முழுவதும் இன்றைய தினமும் காவற்துறை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக காவல் துறை ஊடகப்பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார். இதற்கமைய இன்றைய தினம் இரவு 10.00 மணி முதல் நாளை அதிகாலை 4.00 மணி வரை காவற்துறை ஊரடங்கு சட்டம் அமுலில் காணப்படும் என அவர் மேலும் தெரிவித்தார். மீண்டும் ஊரடங்கு சட்டம்,காவற்துறை ஊரடங்கு சட்டம்,ருவன் குணசேகர

Read More »

அவசர கால சட்டத்தை அமுலாக்குவதற்கு நாடாளுமன்றம் அங்கீகாரம்

பயங்கரவாதி

அவசர கால சட்டத்தை அமுலாக்குவதற்கு நாடாளுமன்றம் அங்கீகாரம் வழங்கியுள்ளது. நாட்டின் தற்போதைய சூழ்நிலையை கருத்திற்கொண்டு பயங்கரவாத தடை சட்டத்தின் சரத்துக்களை அவசகால சட்டத்தின் ஊடாக அமுலாக்குவதற்கு ஏலவே தீர்மானிக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பான யோசனை இன்று நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டது. இதன்போது அவசரகால சட்டத்தை அமுலாக்க நாடாளுமன்றில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. வெடி குண்டுகளை தயார் செய்த தொழிற்சாலை இதுவா? படங்கள்

Read More »

மீண்டும் புயலா ? மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்

மீண்டும் புயலா

இந்தியப் பெருங்கடல் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கோடை வெயில் கொளுத்தி வெக்கையை உண்டு பண்ணும் நேரத்தில் மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக தமிழகத்தில் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்தது. குறிப்பாக நீலகிரி, நெல்லை, கன்னியாகுமரி, போன்ற இடங்களில் மழை அதிகமாக பெய்ததாக தகவல் வெளியானது. இந்நிலையில் இந்திய வங்கக்கடலோரத்தில் புயல் …

Read More »