இன்று இரவு பயணிக்கயிருந்த சகல தபால் தொடரூந்து சேவைகளையும் ரத்து செய்ய தீர்மானித்துள்ளதாக தொடரூந்து கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
Read More »யாழில் கண்காணிப்பு தீவிரம்
யாழ்.மத்திய பஸ் நிலையம் உட்பட்ட பல பகுதிகளில் பெருமளவான பொலிஸ் விசேட அதிரடி படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மத்திய பஸ் நிலையத்திற்கு செல்லும் சந்தேகத்திற்கு இடமானவர்களை அதிரடி படையினர் விசாரணை செய்வதுடன் , சந்தேகத்திற்கு இடமான பொதிகளையும் பரிசோதனை செய்கின்றார்கள். இதேவேளை யாழ்.புறநகர் பகுதிகளிலுள்ள தேவாலயங்கள் , மற்றும் பிரசித்தி பெற்ற இந்து ஆலயங்கள் என்பவற்றுக்கு அருகிலும் பொலிசார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர். LIVE UPDATES : குண்டுவெடிப்பு …
Read More »குண்டு வெடிப்புக்கள் தொடர்பில் உண்மை நிலையை கண்டறிய விசேட குழு நியமனம்
நாட்டின் பல்வேறு பகுதிகளில் நேற்றைய தினம் இடம்பெற்ற குண்டு வெடிப்புக்களின் உண்மையை நிலையை கண்டறிவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மூவரடங்கிய விசேட குழுவொன்றை நியமித்துள்ளார். உயர் நீதிமன்ற நீதிபதி விஜித மலல்கொட, அமைச்சின் முன்னாள் செயலாளர் பத்மசிறி ஜயமன்ன மற்றும் முன்னாள் காவல்துறைமா அதிபர் என்.கே.இலங்ககோண் ஆகியோர் இந்த குழுவில் அடங்கியுள்ளனர். LIVE UPDATES : குண்டுவெடிப்பு தொடர்பான செய்திகள்
Read More »இன்று இரவு 8 மணி தொடக்கம் ஊரடங்குசட்ட உத்தரவு
இன்று இரவு 8 மணி தொடக்கம் நாளை அதிகாலை 4 மணி வரை நாட்டின் பல பாகங்களில் காவற்துறை ஊரடங்குசட்ட உத்தரவு பிறப்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Read More »மட்டக்களப்பில் துக்கதினம் அனுஷ்டிப்பு
கொழும்பு மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் இடம்பெற்ற தொடர் வெடிப்புச் சம்பவங்களால் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இன்று மட்டக்களப்பு மாவட்டத்தின் தமிழ் பிரதேசங்களில் வாழைமரம் நட்டு வெள்ளைக் கொடி கட்டி துக்கதினம் அனுஷ்டிக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்டத்தின் தமிழ் பிரதேசதங்களில் வர்த்தாக நிலைங்கள் பூட்டப்பட்டு வெள்ளளைக் கொடி கட்டப்பட்டிருந்தன. அரச அலுவலகங்கள் அரச மற்றும் தனியார் வங்கிகள் இயங்கவில்லை போக்குவரத்து நடைபெற்ற போதிலும் பொதுக்களின் நடமாட்டம் குறைவாகவே காணப்பட்டது. வீதிகள் வெறிச்சோடிக் …
Read More »LIVE UPDATES : குண்டுவெடிப்பு தொடர்பான செய்திகள்
குண்டு வெடிப்புக்களினால் இதுவரை 290 பேர் பலி குண்டு வெடிப்பினால் பலியானோரின் மரண பரிசோதனைகளை துரிதப்படுத்துமாறு கோரிக்கை வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் கைதான 24 பேர் சி.ஐ.டியில் – பலி எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு குண்டு வெடிப்புக்கள் – தற்கொலை குண்டுத் தாக்குதல் என உறுதி குண்டு வெடிப்பு ; மேலும் இருவர் கைது! யாழ்ப்பாண பொலிஸாரின் அறிவுறுத்தல்! “மறு அறிவித்தல் வரும் வரை ஊரடங்குச் சட்டம் …
Read More »குண்டு வெடிப்பினால் பலியானோரின் மரண பரிசோதனைகளை துரிதப்படுத்துமாறு கோரிக்கை
நாட்டின் பல பகுதியில் நேற்று இடம்பெற்ற குண்டு வெடிப்புக்களில் உயிரிழந்துள்ள நபர்களின் திடீர் மரண பரிசோதனை நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ளுமாறு நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு திடீர் மரண விசாரணையாளர்களிடம் கோரியுள்ளது. உயிரிழந்தவர்களின் தேகங்களை உடனடியாக உறவினர்களுக்கு ஒப்படைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு திடீர் மரண பரிசோதகர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. LIVE UPDATES : குண்டுவெடிப்பு தொடர்பான செய்திகள்
Read More »வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் கைதான 24 பேர் சி.ஐ.டியில் – பலி எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு
நாட்டில் நேற்றைய தினம் இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட 24 சந்தேக நபர்கள் குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். இதேவேளை, வெடிப்பு சம்பவங்களால் இதுவரை 290 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர், காவல்துறை அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். இதனுடன் சுமார் 500 பேர் வரையில் காயமடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், தற்போது நாடாளாவிய ரீதியில் தொடர்ந்து சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக …
Read More »குண்டு வெடிப்புக்கள் – தற்கொலை குண்டுத் தாக்குதல் என உறுதி
கொழும்பில், தேவாலயம் மற்றும் விருந்தகங்களில் இடம்பெற்ற குண்டு வெடிப்புக்கள் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அரச பகுப்பாய்வு நிறுவனம் இந்த உறுதிப்படுத்தலை வெளியிட்டுள்ளது. கொழும்பு – கொட்டாஞ்சேனை – கொச்சிக்கடை தேவாலயம் மற்றும் நீர்கொழும்பு – கட்டான – கட்டுவாபிட்டிய தேவாலயம், மற்றும் மட்டக்களப்பு ஸீயோன் தேவாலயம், கொழும்பு சங்ரிலா, கிங்ஸ்பெரி மற்றும் கொள்ளுப்பிட்டியில் உள்ள சினமன் கிரேன்ட் முதலான விருந்தகங்களில் நேற்று காலை 8.45 முதல் 9.30 …
Read More »குண்டு வெடிப்புக்களினால் இதுவரை 290 பேர் பலி
நாட்டில் இடம்பெற்ற குண்டு வெடிப்புக்களினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 290 வரையில் அதிகரித்துள்ளதாக காவற்துறை ஊடக பேச்சாளரும் காவற்துறை அதியகட்சருமான ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். அத்துடன் காயமடைந்தவர்கள் 500 பேர் வரையில் உள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, அரச சேவையாளர்களுக்கு இன்றைய தினம் விடுமுறை வழக்கப்படவில்லை எனவும் அனைவரும் கடமைக்கு சமூகமளிக்க வேண்டும் எனவும் உள்விவகார அமைச்சு தெரிவித்துள்ளது. அரச நிறுவனங்களை தொடந்தும் இயக்கச் செய்வதற்காக அனைத்து அரச பணியாளர்களும் …
Read More »
Tamilpriyam | Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamil nadu News | Sri Lankan Tamil News Tamil News,Online Tamil News,Tamil News Live,Tamilnadu News,Oneindia Tamil,live tamil news Portal,online tamil news,Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil,all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology,online tamil news, tamil news portal, tamil actors, tamil actresses, astrology news in tamil, chennai news,