கல்லூரி படிக்கும் போது பேருந்தில் பெண்களை உரசியுள்ளேன் என்று நடிகர் சரவணன் கூறியதற்கு சின்மயி கண்டனம் தெரிவித்துள்ளார். பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி விறுவிறுப்பாகச் சென்று கொண்டிருக்கிறது. கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் அவர் ரசிகர்கள் முன் தோன்றும் வார இறுதி நாட்களே அதிகம் ரசிக்கப்படுகிறது. அந்த வகையில் நேற்றைய போட்டியில், மீரா மிதுன் – சேரன் விவகாரத்தைப் பஞ்சாயத்து செய்த கமல் ஹாசன், குறும்படம் மூலம் …
Read More »சிறை கைதிகளின் பிரியாணியை இனி ஆன்லைனிலும் வாங்கலாம்…
கோவை மத்திய சிறை கைதிகள் தயாரிக்கும் பிரியாணியை ஆன்லைன் மூலம் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு, சிறை பஜார் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, சிறை கைதிகள் தயாரிக்கப்படும் உணவு பொருட்கள் நேரடியாக விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது. இதை தொடர்ந்து கோவை மத்திய சிறையில் சிறை கைதிகள் மற்றும் விசாரணை கைதிகள் என மொத்தம் 1,850 கைதிகளும், பெண்கள் 40 கைதிகளும் உள்ள நிலையில், …
Read More »கிளிநொச்சியில் வெட்டுக்காயங்களுடன் தாயும் மகனும் சடலங்களாக இன்று மீட்பு
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜெயந்திநகர் பகுதியில் வெட்டுக்காயங்களுடன் தாயும் மகனும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் வசித்து வந்த வீட்டிலிருந்தே இன்று காலை இரத்த வெள்ளத்தில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். விஷ்ணுகாந்தி வள்ளியம்மை (வயது 70) என்ற வயோதிபத் தாயாரும், அவரது மகனான விஷ்ணுகாந்தி லிங்கேஷ்வரன் (வயது 34) என்ற இளைஞருமே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். இருவரினதும் உடல்களில் வெட்டுக்காயங்கள் காணப்படுகின்றபடியால் அவர்கள் நேற்றிரவு அல்லது இன்று அதிகாலை படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் எனப் …
Read More »பிக் பாஸ் வீட்டில் இருக்க அருகதை இல்லாதவர்; அவரை வெளியே அனுப்புங்கள்
பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து நடிகர் சரவணனை வெளியேற்றுங்கள் என்று நடிகை வனிதா விஜயகுமார் தெரிவித்துள்ளார். பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் சமீபத்தில் கலந்து கொண்ட வனிதா விஜயகுமார், அனல் கிளப்பும் சண்டையில் ஈடுபட்டு பிக் பாஸ் வீட்டைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். வனிதாவின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகமாக இரண்டாவது வாரத்திலேயே வனிதா அதிரடியாக வெளியேற்றப்பட்டார். ஆனால் வனிதா விஜயகுமாரை ரசிகர்கள் பலரும் வைல்ட் கார்ட் என்ட்ரியில் எதிர்பார்த்து …
Read More »இன்றைய ராசிப்பலன் 30 ஆடி 2019 செவ்வாய்க்கிழமை
இன்றைய பஞ்சாங்கம் 30-07-2019, ஆடி 14, செவ்வாய்க்கிழமை, திரியோதசி திதி பிற்பகல் 02.49 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தசி. திருவாதிரை நட்சத்திரம் மாலை 04.47 வரை பின்பு புனர்பூசம். மரணயோகம் மாலை 04.47 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. மாத சிவராத்திரி. சிவ-முருக வழிபாடு நல்லது. சுபமுயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் …
Read More »பிக்பாஸ் வீட்டிற்குள் திருநங்கை தமன்னா: வைல்ட் கார்ட் எண்ட்ரீ!!
திருநங்கை தமன்னா சிம்ஹாத்ரி வைல்ட் கார்ட் போட்டியாளராக பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளார். பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி தமிழ் மற்றும் தெலுங்கில் துவங்கப்பட்டு வெற்றிகரமாக ஒளிப்பரப்பாகி வருகிறது. தமிழியில் பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல் ஹாசனும், தெலுங்கில் நாகர்ஜூனாவும் தொகுத்து வழங்கி வருகின்றனர். தெலுங்கில் பிக்பாஸ் தமிழிழுக்கு பின்னரே துவங்கப்பட்டாலும் வைல்ட் கார்ட் போட்டியாளராக ஒருவர் இந்த வாரம் நுழைந்துள்ளார். ஆம், திருநங்கை தமன்னா சிம்ஹாத்ரி வைல்ட் கார்ட் போட்டியாளராக வீடிற்குள் …
Read More »செனட் சபை உறுப்பினர் குறித்து இனவெறி கருத்து
அமெரிக்காவில் பெண் எம்.பியை நிறவெறி நோக்கத்தோடு விமர்சித்த அதிபர் டிரம்ப் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், நடாளுமன்ற பெண் உறுப்பினர்களை பூர்வீக நாட்டுக்கு திரும்பி செல்லுமாறு கூறி சமீபத்தில் சர்ச்சையில் சிக்கினார். இதைத் தொடர்ந்து, ஜனநாயக கட்சியினர் டிரம்புக்கு எதிராக கண்டனங்கள் தெரிவித்தனர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள், தற்போது பால்டிமர் நகரத்தை விமர்சித்துள்ள அதிபர் டிரம்ப், மனிதர்கள் வசிக்க முடியாத நகரம் என்றும் அமெரிக்காவிலே அருவருப்பான …
Read More »பிரபாகரனின் சதியிலிருந்து இந்தியாவை காப்பற்றியது ராஜபக்சே தான்
பாஜக-வின் மூத்த தலைவர் சுப்ரமணியன் சவாமி, விடுதலை புலிகளின் சதியிலிருந்து இந்தியாவை காப்பாற்றியது இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்சே தான் என தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். பாஜக-வின் மூத்த தலைவர் சுப்ரமணியம் சுவாமி, இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் தீவிர ஆதரவாளர். பல வருடங்களாகவே ராஜபக்ஷேவை தனது நண்பர் என்றும், அவர் ஒரு சிறந்த ஆட்சியாளர் என்றும் புகழ்ந்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில், சுப்ரமணியன் சுவாமியை தனது …
Read More »என் ரெண்டு பொண்டாட்டியையும் எனக்கு காமிங்க: கமலிடம் வேண்டுகோள் விடுத்த சரவணன்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று ஒரு போட்டியாளர் வெளியேறவுள்ள நிலையில் அந்த போட்டியாளர் யார் என்பது குறித்த விவாதத்துடன் கூடிய புரமோ வீடியோ சற்று முன் வெளியாகி உள்ளது இந்த வீடியோவில் தன்னை வெளியேற்ற பரிந்துரை செய்யுமாறு கமல்ஹாசனிடம் சரவணன் கூறுகிறார். ஆனால் அதற்கு கமல்ஹாசன் மறுக்க, உடனே சரவணன் ‘குறைந்தபட்சம் என்னுடைய குழந்தையை கண்ணில் காட்டுங்கள்’ என்று கூறிய பின்னர் அதை செய்துவிடலாம். அதில் ஒரு பிரச்சனையும் இல்லை என்று …
Read More »ரஜினிக்கு ஜோடியான மீரா மிதுன்? நம்பவே முடியாத ரகசிய உண்மை
மோசடி விவகாரத்தில் சிக்கிய சர்ச்சை நாயகி மீரா மிதுன் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்று அடுத்தடுத்து பல ரகளையை செய்துவந்தார். எப்போதும் எல்லோரிடமும் சண்டையிட்டு சக போட்டியாளர்களிடமும் மக்களிடமும் வெறுப்பை சம்பாதித்த மீரா மிதுன், சேரன் மீது அபாண்டமாக பழி சுமத்தியதால் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் தற்போது கேட்பவர்கள் அனைவரும் ஷாக்காகும் அளவிற்கு ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, பேட்ட படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க மீரா மிதுனுக்கு வாய்ப்பு …
Read More »