இன்றைய ராசிப்பலன் 26 வைகாசி 2019 ஞாயிற்றுக்கிழமை

இன்றைய ராசிப்பலன்

இன்றைய பஞ்சாங்கம் 26-05-2019, வைகாசி 12, ஞாயிற்றுக்கிழமை, சப்தமி திதி காலை 08.49 வரை பின்பு தேய்பிறை அஷ்டமி. அவிட்டம் நட்சத்திரம் பகல் 01.13 வரை பின்பு சதயம். மரணயோகம் பகல் 01.13 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1/2. கால பைரவர் வழிபாடு நல்லது. சுபமுயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் – மாலை 04.30 – 06.00, எம கண்டம் – பகல் …

Read More »

உன் நினைவிலே நான்

உன் நினைவிலே நான்

” உன் நினைவிலே நான்….” உன்னுடன் சேர்ந்தே உயிர் வாழ்ந்திடவே உனக்காகவே நானும் உயிர் வாழ்கின்றேனே…… உன்னை நினைத்தே உலகை மறந்தேனே உன் இதய துடிப்பிலே உணர்ந்தேன் என்னையே….. உடலைவிட்டு எந்தன் உயிர்கூட பிரிந்தாலும் உண்மைக் காதலிங்கே உறைந்து விடலாகாதே….. உள்ளத்தின் வேதனையை உள்ளத்தில் அடைத்திங்கே உண்மையான அன்பினாலே உன்னிதழிலே பூக்கின்றாயே….. உன்மீது காதலினால் உயிராக நானிருந்தே உன்னதமான உறவாகவே உறங்கிடுவேன் பாரினிலே….. உன்னதம் ஆனதே உத்தமம் ஆகுதே உண்மை …

Read More »

சிங்கள மொழி சாட்சி பிரதியை தமிழுக்கு மொழிபெயர்த்து மன்றில் சமர்ப்பிக்குமாறு உத்தரவு

சிங்கள மொழி

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கின் சிங்கள மொழியில் இருந்த காவல்துறை அதிகாரியின் சாட்சியின் பிரதியை தமிழுக்கு மொழிபெயர்த்து மன்றில் சமர்ப்பிக்குமாறு யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, நீதவான் பீற்றர் போல் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். பல்கலைக்கழக மாணவர்கள் வி.சுலக்சன், ந.கஜன் ஆகியோர் காங்கேசன்துறை வீதி கொக்குவில் குளப்பிட்டியில் வைத்து கடந்த 2016 ஆம் ஆண்டு ஒக்ரோபர் …

Read More »

பொதுமக்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

LIVE UPDATES : குண்டுவெடிப்பு தொடர்பான செய்திகள்

ஏப்ரல் 21 இல் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழு, தாக்குதல் சமபவம் தொடர்பில் பொதுமக்களிடம் தகவல்களைக் கோரியுள்ளது. அரசாங்கத் தகவல் திணைக்களம் நேற்று மாலை வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதல் சம்பவம் தொடர்பான புலனாய்வுத் தகவல்கள், சட்டத்தை அமுல்படுத்தும் அதிகாரிகளுக்கு அதற்கு முன்னரே கிடைத்திருந்ததா என்றும், தாக்குதல்களைத் தடுப்பதற்கு அதிகாரிகள் போதியளவில் நடவடிக்கை மேற்கொண்டார்களா என்பது குறித்தம் தகவல்கள் …

Read More »

உயர்நீதிமன்றத்தின் கருத்தைக் கோருவதற்கு தீர்மானம்.

உயிர்த்த ஞாயிறு

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் உயர்நீதிமன்றத்தின் கருத்தைக் கோருவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. அடுத்த வாரம் இடம்பெறவுள்ள ஆணைக்குழுவின் கூட்டத்தில் இது குறித்தும், தேர்தலை நடத்துவதற்கான காலம் தொடர்பிலும் சட்ட நிபுணர்களுடன் ஆராயவுள்ளதாக ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். 9 மாகாண சபைகளில் ஊவா மாகாண சபை தவிர்ந்த ஏனைய 8 மாகாண சபைகளின் அதிகார காலம் நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில், மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துவதற்கு உள்ள …

Read More »

இலங்கைக்கு விதிக்கப்பட்டுள்ள பயண எச்சரிக்கையை விலக்கிக்கொள்ளுமாறு பிரதமர் கோரிக்கை

இலங்கைக்கு

இலங்கைக்கு விதிக்கப்பட்டுள்ள பயண எச்சரிக்கையை விலக்கிக் கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு, வெளிநாட்டுத் தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களிடம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கோரியுள்ளார். வெளிநாட்டுத் தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களை இன்று அலரி மாளிகையில் சந்தித்தபோது அவர் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார். நாட்டில் நிலைமை தற்போது வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக பிரதமர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

Read More »

முன்னாள் போராளிகள் குற்றச் செயல்களில் ஈடுபட மாட்டார்கள் – புனர்வாழ்வு ஆணையாளர் தெரிவிப்பு

முன்னாள் போராளிகள்

புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள் குற்றச் செயல்களில் ஈடுபட மாட்டார்கள் என புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர் ஜெனரல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கான வாழ்வாதார உதவித்திட்டம் வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் இன்று இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். முன்னாள் போராளிகள் தான் வவுணதீவில் காவல்துறையினரைக் கொலை செய்தனர் என கூறப்பட்டது ஆனால் அவர்கள் அவ்வாறு செய்யவில்லை என தெரிய வந்திருக்கின்றது. …

Read More »

இன்றைய ராசிப்பலன் 25 வைகாசி 2019 சனிக்கிழமை

இன்றைய ராசிப்பலன்

இன்றைய பஞ்சாங்கம் 25-05-2019, வைகாசி 11, சனிக்கிழமை, சஷ்டி திதி காலை 06.25 வரை பின்பு தேய்பிறை சப்தமி. திருவோணம் நட்சத்திரம் பகல் 10.14 வரை பின்பு அவிட்டம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1/2. இராகு காலம் – காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை …

Read More »

பிக் பாஸ் 3 – ல் மூன்றாம் பாலினத்தவர்கள் (LGBTQ) – கமல் கொடுத்த கிரேட் ஐடியா !

பிக் பாஸ் 3

பிக்பாஸ் சீசன் 3 மெகா ஹிட் அடிக்க கமல் ஹாசன் புது ஐடியா கொடுத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களில் மிகவும் பிரபலமானது பிக் பாஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியின் போட்டியாளராக கலந்து கொண்ட பல பிரபலங்கள் இன்று முன்னணி நடிகர், நடிகைகளாக வலம் வருகின்றனர். மேலும் மக்களின் மனதை எளிதாக வெல்லமும் இந்த நிகழ்ச்சி பிரபலங்களுக்கு, ஒரு பாலமாக அமைகிறது. இதன் காரணமாகேவே திரையுலகில் இருந்து ஓரம் …

Read More »

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை விஷேட ஆராதனைகள் .

மெல்கம் ரஞ்சித் ஆண்டகை

ஏப்ரல் 21 இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்களின் போது உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களுக்காக எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை விஷேட ஆராதனைகள் இடம்பெறவுள்ளன. கொழும்பு மறைமாவட்ட சமூக தொடர்பாடல் மற்றும் கலாச்சார கேந்திர நிலையத்தின் பணிப்பாளர் எட்மண்ட் திலகரத்ன அடிகளார் தெரிவித்துள்ளார். கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் தலைமையில் இந்த ஆராதனைகள் இடம்பெறவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணிக்கு இந்த ஆராதனைகள் ஆரம்பமாகவுள்ளன.

Read More »