விமானங்கள்
பரிசின் நோத்ர-தாம்

எதற்காக தீயணைப்பு விமானங்கள் வரவில்லை?

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

பெரும் தீ விபத்துக்களின் போது, அந்தப் பெரும் தீயை அணைக்க, பொதுமக்கள் பாதுகாப்புத் துறையின் (sécurité civile) மிதக்கும் நீர்தாங்கிகள் என அழைக்கப்படும் canadairs விமானங்கள் பயன்படுத்தப்படும்.

ஆனால் இன்று மாலையில் இருந்து, பெரும் தீவிபத்திற்குள்ளாகிக் கொழுந்து விட்டெரியும் பரிசின் நோத்ர-தாம் தேவாலயத்தின் தீயை அணைப்பதற்கு, இந்தவகை விமானங்களைத் தீயணைப்புப் படையினர் பயன்படுத்தவில்லை.

இது பலரின் மனதில் பெரும் கேள்விகளை உருவாக்கி உள்ளது.

டொனால்ட் டரம்ப் கூட, மிதக்கும் தாங்கிகளை ஏன் பயன்படுத்தவில்லை எனக் கோபமாகத் தனது டுவிட்டரில் கேட்டிருந்தார்.

ஆனால் இந்த canadairs வகை விமானங்கள், பெரும் காட்டுத் தீயை அணைப்பதற்கே பயன்படுத்தப்படும். இது 3 தொன்னிலிருந்து 10 தொன் எடை அளவிலான, நீரை ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் கீழே கொட்டக் கூடியது.

இது ஒரு கட்டத்தின் மீது கொட்டப்பட்டால் அந்தக் கட்டடம் அதனாலேயெ இடிந்து வீழந்து விடும் அபாயம் உள்ளது.

இது பெரும் ஆபத்து என்பதாலேயே, இன்று இது பயன்படுத்தப்படவில்லை என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

About அருள்

Check Also

பரிஸ்

அதிகாரி தொடர்பான விசாரணைகள் தொடர்கிறது!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!2Sharesவியாழக்கிழமை பரிஸ் தலைமையகத்தில் இடம்பெற்றது முற்றுமுழுதான பயங்கரவாத தாக்குதல் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தாக்குதல் தடத்திய அதிகாரியின் முழு …