இலங்கை

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச இந்தியா வருகை

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

இலங்கையின் புதிய அதிபரான கோத்தபய ராஜபக்ச, வரும் 29ம் தேதி இந்தியாவுக்கு வருகை தரவுள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

இலங்கை சென்றுள்ள வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், புதிய அதிபராகப் பதவியேற்ற கோத்தபய ராஜபக்சவை சந்தித்துப் பேசினார்.

இதுகுறித்து தெரிவித்த அவர், இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சவை சந்தித்து அமைதி, வளர்ச்சி, பாதுகாப்பு ஆகியவற்றுக்கு ஒத்துழைப்பு அளித்து செயல்படுவோம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்த செய்தியை அவரிடம் பகிர்ந்து கொண்டதாக கூறினார்.

அரசு முறைப் பயணமாக இந்தியாவுக்கு வர வேண்டும் என்று பிரதமர் மோடி அழைப்பு விடுத்தற்கு கோத்தபய ராஜபக்ச நன்றி தெரிவித்ததாகவும் அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

இதையும் பாருங்க :

இலங்கை

தமிழகம்

இன்றைய ராசிபலன்

உலக செய்திகள்

About அருள்

Check Also

இந்தியாவில் 649 பேர் கொரோனா பாதிப்பு - 13 பேர் பலி

இந்தியாவில் 649 பேர் கொரோனா பாதிப்பு – 13 பேர் பலி

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!1Shareஇந்தியாவில் 649 பேர் கொரோனா பாதிப்பு – 13 பேர் பலி இந்தியாவில் இதுவரை கொரோனாவால் 649 …