ரஜினி

கமலுடன் இணைப்பு வேண்டாம்: எதிர்ப்பு தெரிவிக்கும் ரஜினி ரசிகர்கள்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

சூப்பர் ஸ்டார் ரஜினியும் உலகநாயகன் கமலும் அரசியல்ரீதியாக இணைவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

பெரும்பாலான ரஜினி மற்றும் கமல் ரசிகர்கள் இதனை வரவேற்கின்றர்கள்.

இருப்பினும் ஒரு சில ரஜினி ரசிகர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் அதிமுக மட்டும் பாஜகவை மட்டுமின்றி அவ்வப்போது ரஜினியையும் மறைமுகமாகவும் நேரடியாகவும் கமல் தாக்கி உள்ளார் என்றும்,

அவருடைய மனதில் ரஜினி மீது இன்னும் வன்மம் இருப்பதாகவும், வெளியில் நண்பர் போல் காட்டிக் கொண்டாலும் ரஜினியை அவர் எப்போதும் போட்டியாளராகவே கருதி வருவதாகவும் அவருடன் கூட்டணி வைப்பது தேவையில்லாதது என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்

மேலும் கமல் கட்சி ஆரம்பித்து ஒரு தேர்தலை சந்தித்து விட்ட நிலையில் முதல் தேர்தலில் 5% கூட வாக்குகள் பெறாத ஒரு செல்வாக்கு இல்லாத கட்சியை வைத்துள்ளதாகவும் அதனுடன் ரஜினி இணைந்து ஒருவேளை வெற்றி பெற்றால் அந்த வெற்றியில் 50% தன்னால் வந்ததுதான் என்று வெற்றிக்கு கமல் உரிமை கொண்டாடுவார் என்றும் எனவே ரஜினி முதலில் அறிவித்தபடி 234 தொகுதியிலும் தனித்துப் போட்டியிடுவதே சரியான முடிவாக இருக்கும் என்றும் ரஜினி ரசிகர்கள் சிலர் டுவிட்டரில் தெரிவித்து வருகின்றனர்

கமலுடன் தேவைப்பட்டால் இணைவேன் என்று ரஜினி கூறியிருந்தாலும் கமலுடன் இணைவதை அவர் கடைசி ஆப்ஷனாக வைத்திருப்பதாகவும் இப்போதுவரை அவர் தனித்து போட்டியிடும் மனநிலையில்தான் இருப்பதாகவும் ரஜினி தரப்பில் தெரிவித்து வருகின்றனர்

இதையும் பாருங்க :

இலங்கை

தமிழகம்

இன்றைய ராசிபலன்

உலக செய்திகள்

About அருள்

Check Also

ரஜினிகாந்த்

என் மீது நம்பிக்கை வையுங்கள், அது வீண்போகாது: ரஜினிகாந்த் பேச்சு

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!12Sharesசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகிய தர்பார் படத்தின் இசை …