கஜா புயலில்

கஜா புயலில் வீடு இழந்த 10 பேருக்கு வீடு கட்டிக் கொடுத்த ரஜினிகாந்த்..!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

நாகை மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட 10 குடும்பத்தினருக்கு, மக்கள் மன்றம் சார்பில் கட்டப்பட்ட வீடுகளின் சாவியை பயனாளர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் வழங்கினார்.

கஜா புயலால் முழுவதுமாக வீடுகளை இழந்தவர்களுக்கு ரஜினி மக்கள் மன்றம் சார்பில் கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும் என்று ரஜினி மக்கள் மன்றம் சார்பில் அப்போது அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி கோடியக்கரையில் நான்கு வீடுகளும் தலைஞாயிறு பகுதியில் 6 வீடுகளும், தலா ஒரு லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டன.

சென்னை போயஸ்தோட்டத்தில் உள்ள தனது இல்லத்தில் வைத்து, நாகை மாவட்டத்தில் இருந்து வந்திருந்த பயனாளிகளிடம் நடிகர் ரஜினிகாந்த் சாவியை ஒப்படைத்தார்.

படிக்க:
கவின்-லாஸ்லியா காதல் உண்மையா.. இறுதியில் முற்றுப்புள்ளி வைத்த லாஸ்லியாவின் தோழிகள்

கஜா புயலில்

கஜா புயலில்

About அருள்

Check Also

ரஜினிகாந்த்

என் மீது நம்பிக்கை வையுங்கள், அது வீண்போகாது: ரஜினிகாந்த் பேச்சு

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!12Sharesசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகிய தர்பார் படத்தின் இசை …