இலங்கை வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 359 அல்ல என்றும் 253 பேர் என்றும் இலங்கை அரசு அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளது.
இலங்கையில் கடந்த ஞாயிறு அன்று ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டத்தின் போது தேவாலயங்கள், ஓட்டல்கள் உள்ளிட்ட இடங்களில் நடந்தவெவ்வேறு பகுதிகளில் மனித வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
தாக்குதலுக்கு இதுவரை 359 பேர் வரை உயிர் இழந்துள்ளனர் என்றும் மேலும் 500 பேருக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் ஊடகங்களில் செய்தி வெளியானது.
ஆனால் இதை இலங்கை அரசு மறுத்துள்ளது. 359 பேர் இறந்தததாக இலங்கை அரசு அறிவித்த அறிவிப்பின்படியே ஊடகங்கள் வெளியிட்டன.
ஆனால் இன்று இது குறித்து விளக்கமளித்துள்ள இலங்கை சுகாதாரத்துறை செயலர் அனில் ஜெய்சிங்கே உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 253தான் என்றும் 359 என அறிவிக்கப்பட்டது கணக்கிடுவதில் ஏற்பட்ட தவறு என்றும் அறிவித்துள்ளார்.
அடையாளம் காண முடியாத அளவில் உடல்கள் மீட்கப்பட்டதால் இந்த தவறு நேர்ந்திருக்கலாம் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
உடல்கள் சிதைந்த நிலையில் கிடைத்ததால் இந்த தவறு நடந்துள்ளதாகவும் இப்போது உடல்பரிசோதனைகள் முடிந்த நிலையில் உண்மையாக உயிரிழந்தோர் எண்ணிக்கை வெளியிடப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் விளையாடும் ரஜினி, நயன்தாரா! வைரலாகும் புகைப்படம்!
Tamilpriyam | Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamil nadu News | Sri Lankan Tamil News Tamil News,Online Tamil News,Tamil News Live,Tamilnadu News,Oneindia Tamil,live tamil news Portal,online tamil news,Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil,all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology,online tamil news, tamil news portal, tamil actors, tamil actresses, astrology news in tamil, chennai news,