ரஜினி
ரஜினிகாந்த்

தினமும் ரஜினிகாந்த் மேற்கொள்ளும் பயிற்சி

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

சமீபத்தில் ரஜினிகாந்தை சந்தித்த பிரபல திரையரங்க உரிமையாளர், தனது ட்விட்டர் பக்கத்தில் ஆரோக்கியமாக இருக்க ரஜினிகாந்த் தினமும் நீச்சல் பயிற்சி செய்வதாக கூறியதாக தெரிவித்தார்.

சென்னையை சேர்ந்த திரையரங்க உரிமையாளர் ஒருவர் சமீபத்தில் ரஜினிகாந்தை குடும்பத்துடன் சந்தித்துள்ளார்.

அதை ட்விட்டரில் பகிர்ந்து இருக்கிறார். அவர் தனது பதிவில் ’எனது வாழ்நாள் கனவு இன்று நிறைவேறியது.

தலைவருடன் 15 நிமிடங்கள் செலவிட்டேன். 15 நிமிடங்களுமே பாசிட்டிவ் வைபரே‌ஷன். ஒரு கோயிலை விட்டு வெளியேறியது போல நான் உணர்ந்தேன்.

அவர் சூப்பர் ஸ்டாருக்கும் மேல். திரையில் பார்ப்பதைப் போலதான் நிஜத்திலும் இருக்கிறார். நிறைய உற்சாகமும், நகைச்சுவை உணர்வும் அவரிடம் உள்ளது.

தலைவர் யோகா பயிற்சி செய்வது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் அவரது பிட்னஸ் ரகசியத்தைக் கேட்டு நான் வியந்தேன்.

தினமும் நீச்சல் பயிற்சியில் சூப்பர் ஸ்டார் ஈடுபடுகிறார். முக்கியமாக படப்பிடிப்புக்கு முன் நீச்சல் பயிற்சி செய்கிறார்.

தினசரி உடற்பயிற்சி, யோகா, ஆரோக்கியமான உணவால் உடல்நலத்துடன் இருப்பதுடன் இளமையாகவும் உணர முடியுமென என்னிடம் கூறினார்’. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

About அருள்

Check Also

ரஜினிகாந்த்

என் மீது நம்பிக்கை வையுங்கள், அது வீண்போகாது: ரஜினிகாந்த் பேச்சு

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!12Sharesசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகிய தர்பார் படத்தின் இசை …