முக்கிய வேட்பாளர்கள்: எச்.ராஜா (பாஜக)- கார்த்தி சிதம்பரம் (காங்கிரஸ்) தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் சிவகங்கை தொகுதியும் ஒன்று. இத்தொகுதியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கூட்டணி சார்பில் எச்.ராஜா (பாரதிய ஜனதா கட்சி ), திராவிட முன்னேற்ற கழகம் கூட்டணி சார்பில் கார்த்தி சிதம்பரம் (இந்திய தேசிய காங்கிரஸ் )போட்டிடுவதால் இத்தொகுதியின் பக்கம் அனைவரின் பார்வையும் திரும்பியுள்ளது. கடந்த லோக்சபா தேர்தலில் 73 சதவீத மக்கள் வாக்களித்தனர். …
Read More »பணப்பட்டுவாடா செய்பவர்களை போட்டியிட அனுமதிக்க வேண்டுமா?
வேலூர் தொகுதி தேர்தலை ரத்து செய்ய குடியரசு தலைவருக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து இந்த பரிந்துரையை ஏற்று வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்தார். இந்த வழக்கின் விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது. வேட்பாளர் ஏ.சி.சண்முகம் தரப்பு வாதம் பின்வருமாறு, தேர்தல் தேதி அறிவிகப்பட்ட பின்னர் ஜனாபதிக்கு தேர்தலை ரத்து செய்யும் அதிகாரம் இல்லை. தவறிழைக்கும் …
Read More »’அந்த’ 2 விளம்பரத்தை ஒளிபரப்ப கூடாது: அதிகாரி குட்டு!!!
அதிமுக சார்பில் வெளியிடப்படும் குறிப்பிட்ட தேர்தல் விளம்பரத்தை ஒளிபரப்ப தடை விதித்து தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவிட்டுள்ளார். தேர்தல் நெருங்குவதால் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அந்தந்த கட்சியின் தலைவர்கள் தங்களின் வேட்பாளரை ஆதரித்து சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இதுஒரு புறமிருக்க திமுக, அதிமுக, மநீம கட்சிகள் சமூக வலைதளங்களிலும், டிவிக்களிலும் ஒருவரை ஒருவர் தாக்கி பேசி தங்கள் கட்சிகளின் விளம்பரத்தை மேற்கொண்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக …
Read More »திமுக-33, அதிமுக-6: புதிய தலைமுறையின் கருத்துக்கணிப்பு
புதிய தலைமுறை தொலைக்காட்சியின் தேர்தல் கருத்துக்கணிப்பில் தமிழகத்தில் திமுக கூட்டணிக்கு 31-33 தொகுதிகளும், அதிமுக கூட்டணிக்கு 3-6 தொகுதிகள் கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. மக்கள் நீதி மய்யம் மற்றும் தினகரன் கூட்டணிக்கு ஒரு தொகுதி கூட கிடைக்க வாய்ப்பில்லை என்றே இந்த கருத்துக்கணிப்பு கூறியுள்ளது. இந்த கருத்துக்கணிப்பால் திமுக கூட்டணியினர் உற்சாகத்தில் உள்ளனர். மேலும் ராகுல்காந்தி பிரதமராக வரவேண்டும் என்று 53%க்கும் மேற்பட்டோர் கூறியுள்ளதாகவும், மீண்டும் மோடியே பிரதமராக வேண்டும் …
Read More »ஸ்டாலின் பேச்சை அவர் வீட்டு நாய் கூட கேக்காது: அதிமுக
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான சட்டபேரவை தேர்தல்; வரும் ஏப்ரல் 18 தேதி நடைபெறயுள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில் தேர்தல் பிரச்சரம் தீவிரம் அடைந்துள்ளது. அந்த வகையில், மதுரை கே.புதூர் மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜ் சத்யனை ஆதரித்து எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் செய்தார். அவருடன் அதிமுக அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, உதயகுமார் ஆகியோரும் பிரச்சாரத்தின் போது உடனிருந்தனர். அப்போது …
Read More »அதிமுகவின் 18 சட்டமன்ற இடைத்தேர்தலின் வேட்பாளர் பட்டியல்
தமிழகத்தில் காலியாகவுள்ள 21 சட்டமன்ற தொகுதிகளில் நீதிமன்ற வழக்குகளை காரணம் காட்டி 18 சட்டமன்ற தொகுதிகளில் மட்டும் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் அறிவித்தது. அந்த வகையில் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் திமுக ஏற்கனவே வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்த நிலையில் தற்போது அதிமுகவும் வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளது. இந்த 18 தொகுதிகளிலும் திமுக-அதிமுக நேரடியாக மோதுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளர் பட்டியல் பூந்தமல்லி …
Read More »அதிமுக வேட்பாளர் பட்டியல் இதுதானா?
வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பட்டியல் இன்று அறிவிக்கப்படவிருந்தது. ஆனால் கூட்டணி கட்சியான பாஜகவின் முக்கிய தலைவரும் கோவா முதல்வருமான மனோகர் பாரிக்கர் இயற்கை எய்திய காரணத்தால் பட்டியல் வெளியீடு நாளை என தகவல்கள் கூறுகின்றன. இருப்பினும் அதிமுக வேட்பாளர் பட்டியல் ஒருசில ஊடகங்களுக்கு கசிந்துவிட்டதாக கூறப்படுகிறது. அந்த கசிந்த பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது. நாகை(தனி) – அசோகன் மயிலாடுதுறை – பாரதி மோகன் திருவள்ளூர்(தனி) – …
Read More »தமிழகத்தில் எந்தெந்த கட்சிக்கு எத்தனை தொகுதிகள்
ஒவ்வொரு தேர்தலின்போதும் ஊடகங்களும், தனியார் அமைப்புகளும் வெற்றி பெறும் கூட்டணி எது? கட்சி எது? என்பது குறித்த கருத்துக்கணிப்பை வெளியிடுவது வழக்கமாகி இருந்து வரும் நிலையில் தற்போது இந்தியா டிவி மற்றும் சி.என்.எக்ஸ் ஆகியவை இணைந்து பாராளுமன்ற தேர்தலில் தமிழக கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் கிடைக்கும் என கணித்துள்ளது. இந்த கருத்துக்கணிப்பின்படி தமிழக அரசியல் கட்சிகள் வெற்றி பெறும் தொகுதிகளின் எண்ணிக்கை கீழ்க்கண்டவாறு கூறப்பட்டுள்ளது திமுக: 16 தொகுதிகள் அதிமுக: …
Read More »அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி
மக்களவை தேர்தலில் அஇஅதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக இடம்பெற்றது. முதல்வர் எடப்பாடி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் தேமுக தலைவர் விஜயகாந்த் ஒப்பந்தத்தில் கையெழுத்திடார். இந்த ஒப்பந்தத்தின்படி தேமுதிகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் 21 சட்டமன்ற தொகுதிகளிலும் தேமுதிக, அதிமுக வேட்பாளர்களுக்கு எந்தவித நிபந்தனையும் இன்றி ஆதரவு அளிக்கவும் ஒப்புக்கொண்டது. திமுக கூட்டணியில் கதவு அடைக்கப்பட்டதாலும், தனித்து நின்றால் டெபாசிட் கூட தேறாது என்பதாலும், பிரேமலதாவின் முதிர்ச்சியற்ற …
Read More »அதிமுக கூட்டணியில் இணைகிறது தேமுதிக! 4 தொகுதிகள் என தகவல்
அதிமுக குறித்தும், ஜெயலலிதா குறித்தும் நேற்றைய செய்தியாளர்கள் சந்திப்பின்போது தேமுதிக பொருளாளர் பிரேமலதா விமர்சனம் செய்ததால், தேமுதிகவை அதிமுக தனது கூட்டணியில் சேர்க்காது என்றே கருதப்பட்டது. ஆனால் திடீர் திருப்பமாக அதிமுக கூட்டணியில் இணையவுள்ளதாகவும், அக்கட்சிக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதாகவும் சற்றுமுன் தகவல் வெளிவந்துள்ளது. தே.மு.தி.க.வுக்கு வடசென்னை, திருச்சி, கள்ளக்குறிச்சி, விருதுநகர் ஆகிய தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெகுவிரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது முன்னதாக அதிமுகவில் …
Read More »