வான்வெளியில் புதிய கருந்துளை ஒன்றை அமெரிக்க வெண்வெளி ஆய்வு மையமான நாசா கண்டறிந்துள்ளது. கருந்துளை என்பது கற்பனைக்கு எட்டாத ஈர்ப்பு விசை கொண்ட அண்ட வெளியின் ஒரு பகுதியாகும். ஒவ்வொரு கருந்துளையும் பல சூரியக் குடும்பங்களை விழுங்கும் அளவிற்குப் பெரியது எனக் கூறப்படுகிறது. தொலை நோக்கிகள் மூலம் பால்வெளி மண்டலத்தில் உள்ள நட்சத்திரங்களை குறித்த ஆய்வை மேற்கொண்ட போது சூரியனின் அளவு கொண்ட புதிய கருந்துளையை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். பூமியில் …
Read More »அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு பேத்தி
அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்புக்கும் அவரது முதல் மனைவி இவானா டிரம்புக்கும் பிறந்த 3 வது குழந்தை எரிக். இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு லாரா என்பவரை திருமணம் செய்தார். இந்த தம்பதியினருக்கு எரிக் கியுக் என்ற ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் அடுத்தாண்டு அமெரிக்காவில் நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் 2 வது முறையாக டிரம்ப் போட்டியிடவுள்ளார். இதற்காக வேலைகளில் 2வது முறையாக கர்பமுற்ற லாரா தீவிரமாக …
Read More »ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் 13 பேர் பலி
சோமாலியாவில் அமெரிக்க யுத்த வாநூர்தி மேற்கொண்ட தாக்குதலில் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் 13 பேர் கொல்லப்பட்டதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது. புண்லண்ட் மாகாணத்தில் உள்ள கோலிஸ் மவுண்டனிலேயே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. நேற்று முன்தினம் இதே பிரதேசத்தில் இடம்பெற்ற பிறிதொரு வான் தாக்குதலில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாகாணத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள், புதிதாக தமது சட்டவிரோத குழுவிற்காக அதிக எண்ணிக்கையிலான உறுப்பினர்களை முன்னர் இணைத்து வந்ததாக புலனாய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். …
Read More »பயண எச்சரிக்கையை புதுப்பித்துள்ள அமெரிக்கா!
இலங்கையில் உள்ள அமெரிக்க அரசாங்க அதிகாரிகளது பிள்ளைகளை இலங்கையில் இருந்து நாட்டுக்கு திருப்பி அனுப்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம், தமது பயண எச்சரிக்கையை புதுப்பித்துள்ளது. இதில் இலங்கையில் பயங்கரவாதிகளின் தாக்குதல் அச்சுறுத்தல் இருப்பதால், இலங்கையில் பணியாற்றுகின்ற அமெரிக்க அரசாங்க அதிகாரிகளது குடும்ப அங்கத்தவர்களான முன்பள்ளி மாணவர்கள் முதல் 12ம் தர மாணவர்கள் வரையானவர்களை, நாட்டில் இருந்து அமெரிக்காவிற்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பயங்கரவாதிகள் இலங்கையில் முக்கியமான இடங்களில் தாக்குதல் …
Read More »அமெரிக்க மற்றும் பிரித்தானிய பிரஜைகளுக்கு எச்சரிக்கை
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தை அடுத்து இலங்கையில் சுற்றுலா மேற்கொள்வது தொடர்பில் விடுத்திருந்த எச்சரிக்கை அறிவுறுத்தலை கடுமையாக பின்பற்ற அமெரிக்கா மற்றும் பிரித்தானியா நடவடிக்கை எடுத்துள்ளது. கொழும்பிலுள்ள அமெரிக்க தூதுவராலயம் இந்த எச்சரிக்கை அறிவுறுத்தலை நேற்று மீண்டும் கடுமையாக்கியுள்ளது. தீவிரவாத குழுக்கள் இலங்கையில் மீண்டும் தாக்குதல் நடத்த முயற்சிக்க கூடும் என அமெரிக்கா எச்சரிக்கை அறிவுறுத்தலை விடுத்துள்ளது. தாக்குதல்களுக்காக போக்குவரத்து மத்திய நிலையங்கள், வர்த்தக நிலையங்கள், கடைத்தொகுதிகள், அரசாங்க …
Read More »புதுரக ஆயுதத்தை பரிசோதனை செய்த வட கொரியா
புதிய வகையான ஆயுதம் ஒன்றை சோதனை செய்துள்ளதாக வட கொரியா கூறியுள்ளது. இதுதொடர்பாக கேசிஎன்ஏ எனப்படும் கொரிய அரசு செய்தி முகமை வெளியிட்டுள்ள செய்தியில், இதனை பற்றி தெளிவான தகவல்கள் சொல்லப்படவில்லை. ஆனால், இது சக்தி வாய்ந்த போர் ஆயுதத்தோடு பொருத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சோதனையை கிம் மேற்பார்வையிட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன்னர் அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் கலந்து கொண்ட …
Read More »