உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இடம்பெற்று நாளையுடன் ஒரு மாதம் பூர்தியாகின்றது. இதனை முன்னிட்டு நாளை வடமாகாணத்தில் ஒரு நிமிடம் அஞ்சலி செலுத்துமாறு வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். அதற்கமைய காலை 8.45 அளவில் வழிப்பாட்டுத் தளங்களின் மணியோசை ஒலிக்கச் செய்து அஞ்சலி செலுத்துமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
Read More »உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – கைதான 78 பேரில் 20 பேர் நேரடி தொடர்பு
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கைதான 78 பேரில் 20 பேர் அதனுடன் நேரடியாக தொடர்பு கொண்டவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது. குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் இதனை தெரிவித்துள்ளார். குறித்த 20 பேரிடமும் தற்போது விசாரணை முன்னெடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கைதானவர்களிடம் பெறப்படும் தகவல்களுக்கு அமைய மேலதிக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
Read More »