பாராளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாடு முழுவதும் இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது. மதியம் முன்னணி நிலவரம் தெரியவரும். மத்தியில் ஆட்சியை பிடிப்பது யார்? என்பது இன்று தெரிந்துவிடும். இந்திய பாராளுமன்ற தேர்தல் உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவாக கருதப்படுகிறது. 17-வது பாராளுமன்றத்தை தேர்ந்தெடுக்க ஏப்ரல் மாதம் 11-ந் தேதி தொடங்கி கடந்த 19-ந் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. நாடு முழுவதும் மொத்தம் உள்ள …
Read More »சிவகங்கை மக்களவைத் தேர்தல் 2019
முக்கிய வேட்பாளர்கள்: எச்.ராஜா (பாஜக)- கார்த்தி சிதம்பரம் (காங்கிரஸ்) தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் சிவகங்கை தொகுதியும் ஒன்று. இத்தொகுதியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கூட்டணி சார்பில் எச்.ராஜா (பாரதிய ஜனதா கட்சி ), திராவிட முன்னேற்ற கழகம் கூட்டணி சார்பில் கார்த்தி சிதம்பரம் (இந்திய தேசிய காங்கிரஸ் )போட்டிடுவதால் இத்தொகுதியின் பக்கம் அனைவரின் பார்வையும் திரும்பியுள்ளது. கடந்த லோக்சபா தேர்தலில் 73 சதவீத மக்கள் வாக்களித்தனர். …
Read More »என் உயிருக்கு ஆபத்து – பிரபல நடிகை புகார் !
தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக பிரபல நடிகையும் வடக்கு மும்பை தொகுதி காங்கிரஸ் வேட்பாளருமான ஊர்மிளா மடோன்கர் தெரிவித்துள்ளார். தேர்தல் நேரத்தில் நடிகர், நடிகையர் அரசியல் கட்சிகளில் இணைந்து தேர்தலில் போட்டியிடுவது, பிரச்சாரம் செய்வது இந்தியாவில் சர்வசாதாரணமாகி வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் திரையுலகை சேர்ந்த பலர் பல்வேறு அரசியல் கட்சிகளில் இணைந்துள்ளனர். காங்கிரஸ் கட்சியில் பிரபல பாலிவுட் நடிகை ஊர்மிளா இணைந்துள்ளார். கட்சியில் சேர்ந்த அடுத்தநாளே அவருக்கு …
Read More »காங்கிரஸ்-பாஜக தேர்தல் அறிக்கை குறித்து மு.க.ஸ்டாலின்
திமுக தேர்தல் அறிக்கை கதாநாயகன் என்றால் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை சூப்பர் கதாநாயகன் என்றும், திமுக, காங்கிரஸ் தேர்தல் அறிக்கைகள் ஹீரோ என்றால், பா.ஜ.க. தேர்தல் அறிக்கை ஜீரோ என்றும் நாகர்கோவிலில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். ஏற்கனவே பாஜக தேர்தல் அறிக்கை ஒரு சூப்பர் ஸ்டார் என்ற தமிழிசையின் கருத்துக்கு அவரை எதிர்த்து போட்டியிடும் கனிமொழி ‘அது சூப்பர் ஸ்டார் அல்ல, …
Read More »ராகுல்காந்தி போட்டியிடுவதால் கமல் கட்சிக்கு கம்யூனிஸ்ட் ஆதரவா?
கேரள மாநிலத்தில் உள்ள வயநாடு தொகுதியில் ராகுல்காந்தி திடீரென போட்டியிட முடிவெடுத்ததால் கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிலைமைதான் பரிதாபமாக உள்ளது. கேரளாவில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக வாக்கு கேட்கும் கம்யூனிஸ்ட், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக வாக்கு கேட்டு வருகிறது. இந்த நிலையில் புதுவை தொகுதியில் ஒரு பகுதியான மாஹே கேரளாவை ஒட்டி உள்ளது. இங்கு புதுவை காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு கேட்க கம்யூனிஸ்ட் கட்சிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. பக்கத்து …
Read More »வேட்புமனுத்தாக்கல் செய்தார் பிரகாஷ்ராஜ்
பெங்களூர் மத்திய தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட இருக்கும் நடிகர் பிரகாஷ்ராஜ் நேற்று தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். நடிகர் பிரகாஷ்ராஜ் தனது தோழி கௌரி லங்கேஷை இந்துத்வாவாதி ஒருவர் சுட்டுக்கொன்றதில் இருந்து தீவிரமாக அரசியல் பேசி வருகிறார். அதிலும் பாஜக வையும் இந்துத்வா அரசியலையும் சங்பரிவார் அமைப்புகளையும் எதிர்த்து பல்வேறு அரசியல் கூட்டங்களில் கடுமையாகப் பேசி வருகிறார். சமீபத்தில் கொல்கத்தாவில் நடந்த மாணவர் அமைப்புப் போராட்டத்திலும் கலந்துகொண்டு பேசினார். இதனால் …
Read More »காங்கிரஸ் கட்சியின் அடுத்த வேட்பாளர் பட்டியல் வெளியீடு
நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க வியூகம் அமைத்து வரும் காங்கிரஸ் கட்சி இம்முறை எப்படியும் ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என்ற குறிக்கோளுடன் பணியாற்றி வருகிறது. ஏற்கனவே ராகுல்காந்தி, சோனியா காந்தி போட்டியிடும் தொகுதிகள் உள்பட மொத்தம் ஐந்து வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ள காங்கிரஸ் கட்சி தற்போது ஆறாவது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் ஒன்பது வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் விபரம் பின்வருமாறு 1. கேரளா – ஆழப்புழா – திருமதி …
Read More »மீண்டும் ஆட்சியை பிடிக்கின்றது பாஜக
மக்களவை தேர்தல் தேதி நேற்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஏபிபி-சிவோட்டர்ஸ் கருத்துக்கணிப்பில் பாஜக தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெறும் என்றும் ஒருசில சிறிய கட்சிகளின் உதவியால் மீண்டும் ஆட்சியை பிடிக்க வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் 7 இடங்களையும் பாஜக கூட்டணி வெல்ல வாய்ப்பு உள்ளதாகவும், ஹரியானாவில் மொத்தம் உள்ள 10 தொகுதிகளில் 7 இடங்களை பாஜக கூட்டணியும், 3 இடங்களை காங்கிரஸ் கூட்டணியும் வெல்ல வாய்ப்பு உள்ளதாகவும், பஞ்சாபில் மொத்தம் …
Read More »