இரண்டாவது தடவையாக இந்தியாவின் பிரதமர் பதவியை ஏற்றுள்ள நரேந்திர மோடியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று சந்தித்துள்ளார். ஐதாபாத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது இருநாட்டு உறவுகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்திய பிரதமராக இரண்டாவது தடவையாகவும் நரேந்திரமோடி பதவி ஏற்கும் நிகழ்வில் கலந்துக் கொள்வதற்காக ஜனாதிபதி தலைமையில், அமைச்சர்களான மனோகணேசன், ரவுப் ஹக்கீம் ஆகியோருடன், நாடாளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான் உள்ளிட்டவர்களும் …
Read More »யுத்த வெற்றியின் 10 ஆம் ஆண்டு பூர்த்தி விழா 19 ஆம் திகதி
30 வருடம் இந்நாட்டில் நிலவிய யுத்த நிறைவு வெற்றியின் 10 ஆம் ஆண்டு பூர்த்தி விழா, எதிர்வரும் 19 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெறவுள்ளது. அன்று மாலை 4.00 மணிக்கு இராணுவ வீரர்களின் நினைவு தினம் நாடாளுமன்ற மைதானத்தில் இடம்பெறவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து இராணுவ வீரர்கள் சேவை அதிகாரசபையின் பிரதி பணிப்பாளர் டபிள்யூ.டீ.ஹேமசந்திர தெரிவித்துள்ளார்.
Read More »சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்குமாறு ஜனாதிபதி கோரிக்கை
நாட்டின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, வெளிநாட்டு தூதுவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். யாழ் . பல்கலைக்கழக உப வேந்தர் பதவி நீக்கம்
Read More »கைதான யாழ் பல்கலை மாணவர்களை விடுவிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை
விடுதலைப்புலிகள் தொடர்பான ஆவணங்களை வைத்திருந்ததாக குற்றம்சாட்டப்பட்டு கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ள, யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களை உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கோரி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். அவரினால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மாணவர்கள் தமது கல்வி நடவடிக்கைகளைத் தொடராதிருக்கும் வகையில், பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் அவர்களை கைதுசெய்யும் வகையில் …
Read More »பயண எச்சரிக்கையை புதுப்பித்துள்ள அமெரிக்கா!
இலங்கையில் உள்ள அமெரிக்க அரசாங்க அதிகாரிகளது பிள்ளைகளை இலங்கையில் இருந்து நாட்டுக்கு திருப்பி அனுப்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம், தமது பயண எச்சரிக்கையை புதுப்பித்துள்ளது. இதில் இலங்கையில் பயங்கரவாதிகளின் தாக்குதல் அச்சுறுத்தல் இருப்பதால், இலங்கையில் பணியாற்றுகின்ற அமெரிக்க அரசாங்க அதிகாரிகளது குடும்ப அங்கத்தவர்களான முன்பள்ளி மாணவர்கள் முதல் 12ம் தர மாணவர்கள் வரையானவர்களை, நாட்டில் இருந்து அமெரிக்காவிற்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பயங்கரவாதிகள் இலங்கையில் முக்கியமான இடங்களில் தாக்குதல் …
Read More »தேசிய தவ்ஹீத் அமைப்பை தடைசெய்வதற்கான ஏற்பாடுகள் இல்லை – ஜனாதிபதி
தேசிய தவ்ஹித் ஜமாத்தை தடை செய்வதற்கு அவசியமான சட்டத்திட்டங்கள் விரைவில் கொண்டுவரப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஊடகப்பிரதானிகளுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அவர் இதனைக் கூறினார். தற்போது இலங்கை சட்டத்திட்டங்களின்படி, தேசிய தவ்ஹீத் அமைப்பை தடைசெய்வதற்கான ஏற்பாடுகள் இல்லை. இந்த நிலையில் சட்டத்திருத்தங்களை மேற்கொண்டு அந்த அமைப்பை தடை செய்ய விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். தாக்குதல் இடம்பெற்ற தினத்துக்கு மறுதினமே இந்த …
Read More »குண்டு வெடிப்புக்கள் தொடர்பில் உண்மை நிலையை கண்டறிய விசேட குழு நியமனம்
நாட்டின் பல்வேறு பகுதிகளில் நேற்றைய தினம் இடம்பெற்ற குண்டு வெடிப்புக்களின் உண்மையை நிலையை கண்டறிவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மூவரடங்கிய விசேட குழுவொன்றை நியமித்துள்ளார். உயர் நீதிமன்ற நீதிபதி விஜித மலல்கொட, அமைச்சின் முன்னாள் செயலாளர் பத்மசிறி ஜயமன்ன மற்றும் முன்னாள் காவல்துறைமா அதிபர் என்.கே.இலங்ககோண் ஆகியோர் இந்த குழுவில் அடங்கியுள்ளனர். LIVE UPDATES : குண்டுவெடிப்பு தொடர்பான செய்திகள்
Read More »