ஆவின் பால் விநியோகம் செய்யும் டேங்கர் லாரிகளின் டெண்டரை நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. ஆவின் பாலை தமிழகம் விநியோகம் செய்ய கடந்த ஜனவரி 7 ஆம் தேதி டேங்கர் லாரிகளுக்கான டெண்டர் அறிவிக்கப்பட்டது. இந்த டெண்டரின் ஆரம்ப மதிப்பு 360 கோடி ரூபாயாகும். இந்த டெண்டருக்கு எதிராக தீபிகா டிரான்ஸ்போர்ட் நிறுவனம் தாக்கல் ஏற்ற உயர் நீதிமன்றம் டெண்டரை இறுதி செய்யக் கூடாது என்று உத்தரவிட்டது. ஆனால் நீதிமன்ற உத்தரவை …
Read More »கோட்டாபயவிற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு
பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட மூன்று பேருக்கு எதிராக சட்ட மா அதிபர் திணைக்களம் தொடர்ந்திருந்த வழக்கினை, நிரந்தர நீதாய மேல் நீதிமன்றம் இந்த மாதம் 30ம் திகதி வரையில் ஒத்திவைத்துள்ளது. முன்னைய அரசாங்க காலப்பகுதியில், டீ.ஏ.ராஜபக்ஷ நினைவு நூதனசாலை நிர்மாணத்திற்கு 34 மில்லியன் ரூபாய் அளவான அரச நிதி பயன்படுத்தப்பட்டமைக்கு எதிராக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.
Read More »யாழ்ப்பாணம் நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு
இராணுவத்தினரால் நேற்று கைது செய்யப்பட்ட யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோரை எதிர்வரும் 16ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் நேற்றிரவு உத்தரவிட்டது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகம் இராணுவத்தினர், சிறப்பு அதிரடிப்படையினர் மற்றும் காவல்துறையினரால் நேற்றைய தினம் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதன்போது பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அறையிலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் மாவீரர்களின் ஒளிப்படங்கள் என்பன கைப்பற்றப்பட்டன. …
Read More »சற்றுமுன்னர் பூகொடையில் வெடிப்பு சம்பவம்
பூகொடை பகுதியில் வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் சற்றுமுன்னர் இடம்பெற்றுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. பூகொடையில் அமைந்துள்ள நீதிமன்ற கட்டிடத்திற்கு அருகில் இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர். இந்த வெடிப்பு சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். இதேவேளை உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னர் நேற்று மாலை மற்றும் இரவும் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களின் போது 16 பேர் சந்தேகத்தின் …
Read More »