Tag Archives: பல்கலைக்கழகம்

யாழ்ப்பாணம் நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு

யாழ்ப்பாணம்

இராணுவத்தினரால் நேற்று கைது செய்யப்பட்ட யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோரை எதிர்வரும் 16ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் நேற்றிரவு உத்தரவிட்டது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகம் இராணுவத்தினர், சிறப்பு அதிரடிப்படையினர் மற்றும் காவல்துறையினரால் நேற்றைய தினம் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதன்போது பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அறையிலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் மாவீரர்களின் ஒளிப்படங்கள் என்பன கைப்பற்றப்பட்டன. …

Read More »

மறு அறிவித்தல் வரை அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் பூட்டு!

நாட்டின்

நாட்டின் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக மறு அறிவித்தல் வரை அனைத்து பல்கலைக்கழகங்களையும் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் மொஹான் டிசில்வா குறிப்பிட்டிருக்கின்றார். அத்துடன் விடுதிகளில் தங்கியிருக்கும் மாணவர்களுக்கு தொடர்ந்தும் விடுதிகளில் தங்கியிருக்க முடியும் எனவும், அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Read More »