இலங்கையின் புதிய அதிபரான கோத்தபய ராஜபக்ச, வரும் 29ம் தேதி இந்தியாவுக்கு வருகை தரவுள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இலங்கை சென்றுள்ள வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், புதிய அதிபராகப் பதவியேற்ற கோத்தபய ராஜபக்சவை சந்தித்துப் பேசினார். இதுகுறித்து தெரிவித்த அவர், இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சவை சந்தித்து அமைதி, வளர்ச்சி, பாதுகாப்பு ஆகியவற்றுக்கு ஒத்துழைப்பு அளித்து செயல்படுவோம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்த செய்தியை …
Read More »ராஜபக்ஷக்கள் எவர் வந்தாலும் நவம்பர் 17 இல் சஜித் வெல்வது உறுதி
ஜனாதிபதி தேர்தலில் ராஜபக்ஷக்கள் எவர் வந்தாலும் சஜித் பிரேமதாச ஜனாதிபதியாவதை எவராலும் தடுக்க முடியாது என்று குறிப்பிட்ட அமைச்சர் ராஜித சேனாரத்ன ரணிலை பிரதமர் ஆக்கிய எங்களுக்கு சஜித்தை ஜனாதிபதியாக்குவது பெரிய காரியமல்ல என்று தெரிவித்தார். ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனதிபதி வேட்பாளர் சஜித் அவர்களை வரவேற்கும் கூட்டம் நேற்று பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தலைமையில் அழுத்தக்கடை பிரதேசத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது அதில் உரையாற்றிய போதே இதனை குறிப்பிட்டார். …
Read More »கோட்டாபயவிற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு
பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட மூன்று பேருக்கு எதிராக சட்ட மா அதிபர் திணைக்களம் தொடர்ந்திருந்த வழக்கினை, நிரந்தர நீதாய மேல் நீதிமன்றம் இந்த மாதம் 30ம் திகதி வரையில் ஒத்திவைத்துள்ளது. முன்னைய அரசாங்க காலப்பகுதியில், டீ.ஏ.ராஜபக்ஷ நினைவு நூதனசாலை நிர்மாணத்திற்கு 34 மில்லியன் ரூபாய் அளவான அரச நிதி பயன்படுத்தப்பட்டமைக்கு எதிராக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.
Read More »மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மருந்து தட்டுப்பாடு!
மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டு தாக்குதலில் படுகாயமடைந்தவர்களில் 20 பேர் தொடர்ந்தும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 21ஆம் திகதி இடம்பெற்ற குண்டு வெடிப்பில், காயமடைந்த 73 பேர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களுள் ஏனையவர்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். இதேவேளை, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைத்திய உபகரண பற்றாக்குறை மற்றும் மருந்து தட்டுப்பாடுகள் நிலவுவதாக, மருத்துவமனை பணிப்பாளர் மருத்துவர் …
Read More »தேவாலயங்களில் வழிபாடுகளை மேற்கொள்ளவேண்டாம் – பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித்
பாதுகாப்புக்காரணங்களுக்காக தேவாலயங்களில் வாழிபாடுகளை மேற்கொள்ள வேண்டாமென பேராயர் கர்தினால் மெல்கம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து பேராயர் மேலும் தெரிவித்துள்ளதாவது, பாதுகாப்பு குறித்து உத்தரவாதம் அளிக்க முடியாது. எனவே மீள் அறிவிக்கும் வரை தேவாலயங்களில் வழிபாடுகளை மேற்கொள்ள வேண்டாம் என பேராயர் மெல்கம் கர்தினல் ரஞ்சித் ஆண்டகை இலங்கையிலுள்ள அனைத்து தேவாலயங்களின் பங்குத்தந்தையர்களுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. கடந்த 21 ஆம் திகதி உயிர்ப்பு ஞாயிறு தினத்தன்று கொழும்பு கொச்சிக்கடை …
Read More »விமான நிலைய வீதியில் மீட்கப்பட்ட வெடிகுண்டால் பரபரப்பு
கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு உள் நுழையும் ஆடி அம்பலம வீதியில் இருந்து பி.வீ.சி. குழாயில் பொருத்தப்பட்டு தயார் செய்யப்பட்ட 6 அடி வரை நீளமான குண்டு விமானப்படையினரால் மீட்கப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது. நேற்றைய தினம் விமான நிலையத்துக்கு காணப்பட்ட அச்சுறுத்தல் நிலைமையை கருத்தில் கொண்டு அதன் பாதுகாப்பு விமானப்படையிடம் ஒப்படைக்கப்பட்டது. இந் நிலையிலேயே விமானப்படையின் நடமாடும் சோதனைப் பிரிவு நேற்று இரவு 10.15 அளவில் சோதனையில் ஈடுபட்டிருந்த போது இந்த …
Read More »விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனை புகழ்ந்து தள்ளிய அதிபர்
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் அதவாது 2009 ஆம் ஆண்டில் ஒட்டுமொத்த தமிழர்களின் உணர்வுகளும் ஈழத்தின் பால் துடித்தது. இலங்கை அதிபர் ராஜபக்ஷேவின் ராஜதந்திரத்தால் விடுதலைப் புலிகளின் ராஜ்ஜியம் முடிவுக்கு வந்தது. அப்போது இலங்கை சிங்கள ராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடைபெற்ற போரில் பல லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனும் கொல்லப்பட்டார். இந்நிலையில் இந்தப் படுகொலைக்கு அப்போது இந்தியாவில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் உதவியாக இருந்தது …
Read More »பூமியைக் காக்கப் போராட்டம் நடத்திய பள்ளி மாணவர்கள்
உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பள்ளி மாணவர்கள் பருவநிலை மாற்றத்தைத் தடுக்க அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, நேற்று ஒருநாள் தங்கள் வகுப்புகளைப் புறக்கணித்து அடையாளப் போராட்டம் நடத்தினர். இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, தென்கொரியா உள்ளிட்ட நாடுகளின் பல்வேறு பகுதிகளில் இருந்த மாணவர்கள் இதில் கலந்துகொண்டனர். சமூக வலைத்தளங்கள் மூலம் கடந்த சில மாதங்களாகவே இந்தப் போராட்டம் ஒருங்கிணைக்கப்பட்டது. சுவீடனைச் சேர்ந்த பள்ளி மாணவி …
Read More »