Tag Archives: வைத்தியசாலை

தொடரூந்துடன் மோதுண்டு விபத்தில் சிக்கிய பேருந்து! படங்கள்

தொடரூந்துடன்

யாழ் எழுதுமட்டுவால் பகுதியில் ரயிலுடன் மோதுண்டு சிறியரக பஸ் விபத்தில் சாரதி படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் இன்று காலையில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்தி ரயில், கச்சாய் பகுதியிலிருந்து கொடிகாமம் நோக்கி பயணித்த சிறியரக பயணிகளை ஏற்றும் பஸ்ஸில் மோதியுள்ளது. இதன்போது குறித்த பஸ் மோசமாக சேதமடைந்துள்ளது. பஸ் சாரதி படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த ரயில் கடவையை கடக்க …

Read More »

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மருந்து தட்டுப்பாடு!

மட்டக்களப்பு

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டு தாக்குதலில் படுகாயமடைந்தவர்களில் 20 பேர் தொடர்ந்தும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 21ஆம் திகதி இடம்பெற்ற குண்டு வெடிப்பில், காயமடைந்த 73 பேர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களுள் ஏனையவர்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். இதேவேளை, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைத்திய உபகரண பற்றாக்குறை மற்றும் மருந்து தட்டுப்பாடுகள் நிலவுவதாக, மருத்துவமனை பணிப்பாளர் மருத்துவர் …

Read More »

பொலிஸ் ஊரடங்கு தளர்த்தப்படுகிறது – பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

பொலிஸ் ஊடரங்குச் சட்டம்

நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்குச்சட்டம் இன்று காலை 6 மணியுடன் தளர்த்தப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். நாட்டில் நேற்றையதினம் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களையடுத்து நாட்டின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் நேற்று மாலை 6 மணி முதல் இன்று காலை 6 மணிவரை பொலிஸாரினால் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டமே இன்று காலை 6 மணியுடன் தளர்த்தப்பட்டுள்ளது. இதேவேளை, நேற்றைய தினம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற 8 தொடர் …

Read More »

பாதுகாப்புத் தரப்பு கவனம் செலுத்தாதது பாரதூரமானது

ரணில் விக்ரமசிங்க

இவ்வாறான மோசமான  தொடர்குண்டு தாக்குதல் சம்பவம் இடம்பெறும் அச்சுறுத்தல் ஏற்கனவே விடுக்கப்பட்ட போதும் அதுகுறித்து பாதுகாப்பு தரப்பு கவனம் செலுத்தாதும் , எமக்கு அறியப்படுத்ததும் பாரதூரமான பிரச்சினையாகும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.  இந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தின் பின்னணியில் சர்வதேச சக்திகள் உள்ளனவா என்பதை கண்டறிய சர்வதேச பொலிஸ் உதவியை கோருகின்றோம், எமது புலனாய்வு துறையும் இதுகுறித்து ஆராய்ந்து வருகின்றது என்றவும் குறிப்பிட்டார்.  பிரதமர் ரணில் விக்ரமசிங்க …

Read More »

இலங்கையை உலுக்கிய குண்டு வெடிப்புகள் இதுவரை 218 பேர் பலி

LIVE UPDATES : குண்டுவெடிப்பு தொடர்பான செய்திகள்

தலை நகர் கொழும்பு உட்பட  நாட்டில் இன்று இடம்பெற்ற 8 தொடர் குண்டுவெடிப்புக்களில் 218  உயிரிழந்துள்ளதுடன் மேலும் 452 பேர் படுகாயமடைந்து 6 வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.  பலியானவர்களில் சுமார் 35 வெளிநாட்டவர்களும் உள்ளடங்கும் நிலையில், காயமடைந்த பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கையில் மாற்றம் ஏற்படலாம் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கொழும்பின் கரையோர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம், நீர்கொழும்பு, கட்டான …

Read More »

“மறு அறிவித்தல் வரும் வரை ஊரடங்குச் சட்டம் தொடரும்”

பொலிஸ் ஊடரங்குச் சட்டம்

நாட்டில் நிலவும் பதற்ற நிலையினால அமுல்படுத்தப்பட்ட பொலிஸ் ஊடரங்குச் சட்டம் மறு அறிவித்தல் வரும் வரையில் நீடிக்கப்பட்டுள்ளது. இன்று இடம்பெற்ற தொடர்ச்சியான குண்டு வெடிப்பு சம்பங்களையடுத்து பாதுகாப்பினை கருத்திற் கொண்டு பொலிஸ் ஊடரங்குச் சட்டம் இன்று பிற்பகல் அமுல்படுத்தப்பட்டதுடன், அந்த ஊடரங்குச் சட்டம் நாளை காலை 6.00 மணி வரை அமுலில் இருக்கும் என பொலிஸ் ஊடகம் அறிவித்திருந்தது. இந் நிலையிலேயே தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி மறு அறிவித்தல் வரும் …

Read More »