அமெரிக்கா செல்லும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு இந்த ஆண்டின் ஆசியாவின் சர்வதேச எழுச்சி நட்சத்திரம்(International Rising Star of the year – Asia Award) என்ற விருது வழங்கப்படவுள்ளது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் அமெரிக்க பயணம் குறித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், ‘துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நவம்பர் 8 முதல் நவம்பர் 17 வரை அரசுமுறை …
Read More »முதல்வர் போட்ட கண்டிஷனால் அதிர்ச்சியில் அதிமுகவினர்
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலில் அதோ இதோ என்று இழுத்துக்கொண்டே சென்று நிலையில் தற்போது வரும் டிசம்பர் மாதம் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்பது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது. இதனை அடுத்து அரசியல் கட்சிகளும் உள்ளாட்சி தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன. இந்த நிலையில் சமீபத்தில் சேலம் சென்றிருந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், அம்மாவட்டத்தில் உள்ள அதிமுக நிர்வாகிகள் அனைவரையும் அழைத்து அவசர ஆலோசனை செய்தார். உள்ளாட்சித் தேர்தல் வரும் …
Read More »இடைத் தேர்தலைத் தொடர்ந்து உள்ளாட்சித் தேர்தலிலும் அ.தி.மு.க வெற்றி பெறும்!
சசிகலா, தினகரனை கட்சியில் சேர்ப்பது குறித்து அ.தி.மு.க பொதுக்குழுவில் பேசி முடிவு செய்யப்படும். இடைத்தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து உள்ளாட்சித் தேர்தலிலும் அ.தி.மு.கவின் வெற்றித் தொடரும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். விக்ரவாண்டி மற்றும் நாங்குநேரி நடைபெற்ற இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் நடைபெற்றுவருகிறது. இரண்டு தொகுதிகளிலும் அ.தி.மு.க தொடக்கம் முதலே முன்னிலையில் இருந்துவருகிறது. இந்நிலையில் சிவகங்கையில் செய்தியாளர்களிடம் பேசிய அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் …
Read More »மோடியிடம் வேண்டுகோள் வைத்த கமல்!
நீங்கள் ஒரு முன்னோடியாக திகழ்ந்து இந்த பேனர் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வையுங்கள் என்று பிரதமர் மோடிக்கு கமல்ஹாசன் வேண்டுகோள் வைத்துள்ளார். இந்தியா – சீனா இடையிலான வர்த்தக உறவு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்க இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஜீ ஜின்பிங்கும், தமிழகத்தின் மாமல்லபுரத்துக்கு வருகை தரவுள்ளனர். இந்த சந்திப்பு வரும் அக்டோபர் 11-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை நடக்கிறது. தமிழகம் …
Read More »காமராஜரின் திட்டத்தை தவிடுபொடியாக்குகிறது தமிழக அரசு.. பொதுத்தேர்வு குறித்து கமல்ஹாசன் விமர்சனம்
5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் என்பதை தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில், இது காமராஜர் மற்றும் எம்.ஜி.ஆரின் திட்டங்களை தவிடுபொடியாக்கும் என்று நடிகர் கமல்ஹாசன் விமர்சித்துள்ளார். தமிழக அரசு 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என அறிவித்துள்ளது. இதை தொடர்ந்து பல அரசியல் தலைவர்களும், கல்வியாளர்களும், சமூக ஆர்வலர்களும் தமிழக அரசை விமர்சித்து வருகின்றனர். இவர்களை தொடர்ந்து நடிகர் …
Read More »காவிரி தண்ணீர் கடலில்தான் கலக்கப் போகிறது – வைகோ ஆதங்கம்
சென்ற வருடம் முக்கொம்பில் உடைந்த அணையை சரி செய்யாததால் தற்போது காவிரிக்கு வரும் நீர் வீணாக கடலில்தான் கலக்க போகிறது என வைகோ தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். 2018ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் திருச்சி அருகே உள்ள முக்கொம்பு அணையில் உடைப்பு ஏற்பட்டது. அந்த அணை 1836ல் வெள்ளையர் காலத்தில் கட்டப்பட்டது என்பதால் புதிய அணை ஒன்றை கட்ட தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்தது. ஆனால் அந்த பணிகள் …
Read More »என் கருத்துக்களை ஆதரித்த அனைவருக்கும் நன்றி: சூர்யா அறிக்கை!
ஏழை மாணவர்களின் கல்வி நலன் கருதி தன் கருத்துகளை ஆதரித்த அனைவருக்கும் சூர்யா நன்றி தெரிவித்துள்ளார். நடிகர் சூர்யா சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது, புதிய கல்விக் கொள்கை குறித்தும், மூன்று வயதிலிருந்தே இந்தி திணிக்கப்படுகிறது என்றும் பேசினார். சூர்யாவின் இந்த பேச்சுக்கு பாஜகவைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகள் பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இதையடுத்து சூர்யாவின் பேச்சுக்கு நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன் ஆதரவு …
Read More »உனக்கு என்ன தகுதி இருக்கு? வாய்விட்டவர்களுக்கு பதிலடி கொடுத்த சூர்யா!!
நடிகர் சூர்யா கல்விக்கொள்கை குறித்து பேசியதற்கு விமர்சனங்கள் முன்வந்த நிலையில், அவர் இதற்கு விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். புதிய கல்விக்கொள்கைக்கு எதிராக பேசியதாக அதிமுக மற்றும் பாஜகவினர் சூர்யாவின் கருத்தை விமர்சித்தினர். ஆனால், அவருக்கு ஆதரவாக கமல், சீமான் ஆகியோர் குரல் கொடுத்தனர். ஆனால், இது குறித்து சூர்யா எந்த ஒரு பதிலையும் தெரிவிக்கவில்லை. ஆனால், இப்போது இது குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ள …
Read More »அமமுக-வை கலைக்க முடிவா? சசிகலா
சிறையில் இருக்கும் சசிகலா வெளியே எடுக்க சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என தினகரன் கூறினார். சொத்துகுவிப்பு வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு சசிகலா நான்கு ஆண்டு சிறை தண்டனையை அனுபவித்து வருகிறார். சசிகலா சிறைக்கு போய் கிட்டத்தட்ட இரண்டரை வருடங்கள் ஆகிறது. இந்நிலையில் தினகரன் சமீபத்தில் வெளியே எடுக்க சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்திருந்தார். அப்படி சசிகலா வெளியே வரும் பட்சத்தில் அவர் அமமுகவை கலைக்க …
Read More »ஒற்றைத்தலைமை தேவையா என்பதை காலம்தான் முடிவு செய்யும்
மதுரை வடக்கு தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா சமீபத்திய பேட்டியில், அ.தி.மு.க.வுக்கு ஒரே தலைமை தேவை என்று கூறியிருந்தார். ‘அதிமுகவில் ஆளுமை திறனுடைய தலைவர் இல்லை. ஒற்றை தலைமையில் கட்சியை கட்டுப்பாட்டுடன் கொண்டு செல்ல வேண்டும். 2 தலைமை இருப்பதால் முடிவு எடுக்க முடியவில்லை. சுயநலமற்ற ஒருவரை தலைமைக்கு தேர்ந்து எடுக்க வேண்டும். முடிவெடுக்கும் நிலையில் கட்சி தலைமை இருக்க வேண்டும். ஒரே தலைமையை உருவாக்குவது குறித்து அ.தி.மு.க. …
Read More »