மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்கும் விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின் அழைக்காதது ஏன் என சில யூகங்கள் வெளியாகியுள்ளது. இந்தியாவின் 17 வது மக்களவைத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்றதை அடுத்து, பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் பிரமராக இன்று பதவியேற்கிறார். இந்த விழாவிற்கு வெளிநாட்டு தலைவர்கள், மாநில தலைவர்கள் பலர் அழைக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டை பொருத்தவரை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், ரஜினிகாந்த் ஆகியோருக்கு அழைப்பு …
Read More »என் உயிருக்கு ஆபத்து – பிரபல நடிகை புகார் !
தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக பிரபல நடிகையும் வடக்கு மும்பை தொகுதி காங்கிரஸ் வேட்பாளருமான ஊர்மிளா மடோன்கர் தெரிவித்துள்ளார். தேர்தல் நேரத்தில் நடிகர், நடிகையர் அரசியல் கட்சிகளில் இணைந்து தேர்தலில் போட்டியிடுவது, பிரச்சாரம் செய்வது இந்தியாவில் சர்வசாதாரணமாகி வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் திரையுலகை சேர்ந்த பலர் பல்வேறு அரசியல் கட்சிகளில் இணைந்துள்ளனர். காங்கிரஸ் கட்சியில் பிரபல பாலிவுட் நடிகை ஊர்மிளா இணைந்துள்ளார். கட்சியில் சேர்ந்த அடுத்தநாளே அவருக்கு …
Read More »காங்கிரஸ்-பாஜக தேர்தல் அறிக்கை குறித்து மு.க.ஸ்டாலின்
திமுக தேர்தல் அறிக்கை கதாநாயகன் என்றால் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை சூப்பர் கதாநாயகன் என்றும், திமுக, காங்கிரஸ் தேர்தல் அறிக்கைகள் ஹீரோ என்றால், பா.ஜ.க. தேர்தல் அறிக்கை ஜீரோ என்றும் நாகர்கோவிலில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். ஏற்கனவே பாஜக தேர்தல் அறிக்கை ஒரு சூப்பர் ஸ்டார் என்ற தமிழிசையின் கருத்துக்கு அவரை எதிர்த்து போட்டியிடும் கனிமொழி ‘அது சூப்பர் ஸ்டார் அல்ல, …
Read More »இன்று பாஜக வேட்பாளர் பட்டியல்! தமிழிசை போட்டி எங்கே?
அதிமுக, திமுக, மதிமுக, தேமுதிக, பாமக, கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்பட முக்கிய அரசியல் கட்சிகள் வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்துவிட்டு பிரச்சாரத்தையும் தொடங்கிவிட்ட நிலையில் தேசிய கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரண்டு கட்சிகளின் வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகவுள்ளதாக செய்திகள் வந்துள்ளது. குறிப்பாக பாஜக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் தெரிவித்துள்ளார். அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு …
Read More »காங்கிரஸ் கட்சியின் அடுத்த வேட்பாளர் பட்டியல் வெளியீடு
நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க வியூகம் அமைத்து வரும் காங்கிரஸ் கட்சி இம்முறை எப்படியும் ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என்ற குறிக்கோளுடன் பணியாற்றி வருகிறது. ஏற்கனவே ராகுல்காந்தி, சோனியா காந்தி போட்டியிடும் தொகுதிகள் உள்பட மொத்தம் ஐந்து வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ள காங்கிரஸ் கட்சி தற்போது ஆறாவது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் ஒன்பது வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் விபரம் பின்வருமாறு 1. கேரளா – ஆழப்புழா – திருமதி …
Read More »மீண்டும் ஆட்சியை பிடிக்கின்றது பாஜக
மக்களவை தேர்தல் தேதி நேற்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஏபிபி-சிவோட்டர்ஸ் கருத்துக்கணிப்பில் பாஜக தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெறும் என்றும் ஒருசில சிறிய கட்சிகளின் உதவியால் மீண்டும் ஆட்சியை பிடிக்க வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் 7 இடங்களையும் பாஜக கூட்டணி வெல்ல வாய்ப்பு உள்ளதாகவும், ஹரியானாவில் மொத்தம் உள்ள 10 தொகுதிகளில் 7 இடங்களை பாஜக கூட்டணியும், 3 இடங்களை காங்கிரஸ் கூட்டணியும் வெல்ல வாய்ப்பு உள்ளதாகவும், பஞ்சாபில் மொத்தம் …
Read More »ஒருவழியாக காங்கிரஸ் – மார்க்சிஸ்ட் கட்சிகளுக்கிடையே உடன்பாடு!
மேற்குவங்கத்தில் காங்கிரஸ் கட்சிக்கும் மார்க்சிஸ்ட் கட்சிக்கும் இடையே தொகுதி உடன்பாடு ஏற்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தலில் காங்கிரசுடன் 6 தொகுதிகளில் புரிந்துணர்வு முறையில் உடன்பாடு கொள்ள மார்க்சிஸ்ட் கட்சி தயாராக இருந்த போதும் ராய்கஞ்ச் மற்றும் முர்ஷிதாபாத் ஆகிய தொகுதிகளில் இழுபறி நீடித்து வந்தது. பிறகு இந்த இரண்டு தொகுதிகளிலும் மார்க்சிஸ்ட் கட்சி தன்னிச்சையாக வேட்பாளர்களை அறிவித்தது. இதனையடுத்து காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியும் மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியும் பேச்சுவார்த்தை …
Read More »