Tag Archives: News

ஐ.என்.எக்ஸ் முறைகேடு வழக்கில் ப. சிதம்பரத்தின் காவல் நீட்டிப்பு

ப.சிதம்பரம்

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு தொடர்பாக, ப.சிதம்பரத்தை வரும் திங்கட்கிழமை வரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பாக கடந்த 21 ஆம் தேதி முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். இதனையடுத்து ஆகஸ்ட் 26 ஆம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. அதை தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட சிதம்பரத்தை …

Read More »

ஒகேனக்கல்லில் நீர்வரத்து 11,000 கன அடியாக உயர்வு

ஒகேனக்கல்லில்

மேட்டூர் மற்றும் ஒகேனக்கல் அணைகளின் நிலவரங்கள் …. கர்நாடக மாநிலத்தில் உள்ள, கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி ஆகிய இரு அணைகளில் இருந்து, வினாடிக்கு 14 ஆயிரத்து 500 கன அடி உபரிநீர், தமிழகத்துக்கு வெளியேற்றப்பட்டு வருகிறது. தமிழக எல்லையான பிலிகுண்டுலு வழியாக, ஒகேனக்கல் வரும் காவிரி நீரின் வரத்து, வினாடிக்கு 11 ஆயிரம் கனஅடியாக தொடர்ந்து நீடித்து வருகிறது. நீர்வரத்து காரணமாக ஒகேனக்கல்லில் 22 வது நாளாக குளிக்க …

Read More »

பவானி சாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரிப்பு

பவானி சாகர்

ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் இருந்து பாசனத்திற்காக நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது. இன்று காலை நிலவரப்படி 105 அடி உயரம் கொண்ட அணையில் நீர் மட்டம் 94 புள்ளி 22 அடியாகவும், நீர் இருப்பு 24 புள்ளி 4 டிஎம்சியாகவும் உள்ளது. அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 6 ஆயிரத்து 89 கன அடியாக உள்ளது. தற்போது விநாடிக்கு, 2ஆயிரத்து 200 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. …

Read More »

தமிழகத்திற்கு 525 மின்சார பேருந்துகள்

தமிழகத்திற்கு

நாடு முழுவதும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மின்சார பேருந்துகளை இயக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, முதற்கட்டமாக போக்குவரத்து துறையில் இந்த திட்டத்தை செயல்படுத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. இதற்காக மாநில அரசுகளிடம் ஆலோசனைகள் கேட்கப்பட்டது.14 ஆயிரத்து 988 பேருந்து வழங்க வேண்டும் என்று மாநில அரசுகள் கோரிக்கை வைத்தன. இதை பரிசீலித்த மத்திய அரசு 64 நகரங்களுக்கு 5 ஆயிரத்து 595 மின்சார பேருந்துகளை …

Read More »

தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்வு

தங்கத்தின்

10 நாட்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு 104 ரூபாய் அதிகரித்து 28 ஆயிரத்து 656 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 13 ரூபாய் அதிகரித்து 3 ஆயிரத்து 582 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிராம் ஒன்றுக்கு 20 காசுகள் குறைந்து, 47 ரூபாய் 30 காசுகளுக்கும், கிலோ ஒன்றுக்கு 200 ரூபாய் …

Read More »

ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் காங்கிரஸ் மீது குற்றம் சாட்டிய வைகோ

வைகோ

ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் காங்கிரசை அவதூறாக பேசிய வைகோவை பச்சோந்தி என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி விமர்சித்துள்ளார். இதனால் திமுக கூட்டணியில் பிளவு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. ஜம்மு காஷ்மீர் சிறப்பு அதிகார ரத்து மசோதா மீதான விவாதத்தில் பேசிய வைகோ, காங்கிரஸ் கட்சி மற்றும் ஜவஹர்லால் நேருவின் தவறான கொள்கையே ஜம்மு காஷ்மீரின் நிலைக்கு காரணம் என்று குற்றம்சாட்டியிருந்தார். வைகோவின் மாநிலங்களவை பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள …

Read More »

பொருளாதார சீரழிவில் பாகிஸ்தான்- மக்கள் தவிப்பு

பாகிஸ்தான்

பாகிஸ்தானின் மக்களில் இரண்டில் ஒருவர் நாளுக்கு இரண்டு வேளை உணவு கூட இல்லாமல் தவிப்பதாக சமீபத்திய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. சீரழிக்கப்பட்ட பாகிஸ்தானின் தற்போதைய பரிதாபநிலை குறித்து இந்த செய்தித் தொகுப்பில் பார்ப்போம்… ராணுவ ஆட்சி, தவறான பொருளாதாரக் கொள்கைகள், ஓயாத தீவிரவாதம் – இவற்றால் பாகிஸ்தானின் பொருளாதாரம் தொடர்ந்து அதலபாதாளத்தை நோக்கி சென்று வருகிறது. 25 ஆண்டுகளுக்கு முன்பு கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்த பாகிஸ்தானில் மீண்டும் அதே நிலை …

Read More »

பிலிப்பைன்ஸில் அடுத்தடுத்து நிகழ்ந்த நிலநடுக்கம்

பிலிப்பைன்ஸில்

பிலிப்பைன்ஸில் அடுத்தடுத்து நிகழ்ந்த நிலநடுக்கதால் 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில், ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். பிலிப்பன்ஸின் வடக்கு தீவு பகுதியான படானஸ் பகுதியில் திடீரென நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் 5.9 ஆக பதிவான நிலையில், அடுத்த 20 நிமிடத்தில் 4.5 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மீண்டும் மீண்டும் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஆயிரக்கணக்கானீர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த நில்நடுக்கதால் …

Read More »

பிரான்சில் டைனோசரின் ராட்சத தொடை எலும்பு கண்டுபிடிப்பு

பிரான்சில்

பிரான்ஸில் 140 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த டைனோசரின் ராட்சத தொடை எலும்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸின் தென்மேற்கு பகுதியில் உள்ள ஏஞ்சியாக்- சரன்டீ (Angeac-Charente) பகுதியில் தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் கடந்த 2010ம் ஆண்டு முதல் ஆராய்ச்சி பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை பல நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த 40க்கு மேற்பட்ட உயினங்களின் படிமங்களை கண்டுபிடித்துள்ள நிலையில், மண்ணுக்குள் புதைந்து கிடந்த 2 மீட்டர் நீளம் கொண்ட ராட்சத தொடை எலும்பு …

Read More »

பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த காவலர்களால் பரபரப்பு

மீரா

மீராமிதுனிடம் சம்மன் அளிக்க பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த காவலர்களால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை செம்பரம்பாக்கத்தில் உள்ள ஈ.வி.பி.பிலிம் சிட்டியில் தனியார் தொலைக்காட்சி சார்பில், பிரமாண்டமான அரங்கு அமைத்து பிக்பாஸ் சீசன் – 3 நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதில் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை நடிகர், நடிகைகள் கலந்து கொண்டுள்ளனர். 100 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் வாரம் ஒரு நபர் வெளியேற்றப்பட்டு வருகிறார்கள். இந்த நிகழ்ச்சியில் பிரபல மாடலிங் அழகியும், …

Read More »