கர்நாடகாவின் 15 தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் 11 இடங்களில் பாஜக முன்னிலையில் உள்ளதால், அங்கு எடியூரப்பா தனது ஆட்சியை தக்கவைத்துக்கொள்ளும் சூழல் உருவாகியுள்ளது. 224 உறுப்பினர்களைக் கொண்ட கர்நாடக சட்டப்பேரவையில் தகுதிநீக்க நடவடிக்கையால் 17 எம்.எல்.ஏ.க்கள் தொகுதி காலியாக உள்ளது. இதில் 2 தொகுதிகள் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் மீதமுள்ள 15 தொகுதிகளுக்கு கடந்த 5-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இதற்கான வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு …
Read More »பழைய முகம் பார்த்தேன்…சிந்தனைச் சிரிப்பைக் கேட்டேன்- வைரமுத்து
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியதை அடுத்து, திகார் சிறையிலிருந்து 106 நாட்களுக்கு வெளியே வந்த ப.சிதம்பரம் சற்றுமுன் சுதந்திர காற்றை சுவாசித்தார். திகார் சிறையில் வாசலில் அவரை வரவேற்க நூற்றுக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் திரண்டனர். இந்நிலையில் இன்று கவிஞர் வைரமுத்து சென்று ப. சிதம்பரத்தை சந்தித்து பேசியுள்ளார். ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை ஆகிய இரண்டு அமைப்புகளால் …
Read More »உச்சநீதிமன்றம் சொன்னதால் விசாரிக்கிறோம்! – குட்டு வாங்கிய பாஜக வழக்கறிஞர்!
மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சியமைத்ததற்கு எதிராக சிவசேனா கூட்டணி தொடுத்த வழக்கில் இன்று விசாரணை நடைபெற்று வருகிறது. மகாராஷ்டிராவின் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்க இருந்த நிலையில் பாஜகவை அழைத்து பதவி பிரமாணம் செய்து வைத்தார் ஆளுனர். இதை எதிர்த்து வழக்கு தொடர்ந்தது சிவசேனா. இந்த வழக்கை அவசர வழக்காக எடுத்துக்கொண்ட உச்சநீதிமன்றம் உடனடியாக விசாரிக்க ஆணையிட்டது. அதனால் ஞாயிற்றுக்கிழமை என்று பாராமல் இன்றே விசாரணை …
Read More »அயோத்தி சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்ட உச்ச நீதிமன்றம் அனுமதி!
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியிலுள்ள சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்டுவதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அயோத்தியில் ராம ஜென்மபூமி – பாபர் மசூதி பிரச்னை தொடர்பாக சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை 2 இந்து அமைப்புகளும், ஒரு முஸ்லிம் அமைப்பும் சமமாக பிரித்துக் கொள்ளுமாறு அலகாபாத் உயர்நீதிமன்றம் கடந்த 2010ஆம் ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி தீர்ப்பளித்தது. அந்தத் தீர்ப்பை எதிர்த்து மூன்று அமைப்புகளும் உச்ச நீதிமன்றத்தில் …
Read More »ஸ்டெர்லைட் ஆலை மூடல் – தமிழக அரசுக்கு முழு அதிகாரம் !
ஸ்டெர்லைட் ஆடையை மூடியது சம்மந்தப்பட்ட வழக்கில் தமிழக அரசுக்கு முழு அதிகாரம் உள்ளதாக தமிழக அரசு சார்பில் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலை வெளியேற்றும் கழிவுகள் காரணமாக, சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது என மக்கள் போராட்டம் நடந்தபோது கலவரம் ஏற்பட்டு, 13 அப்பாவி பொதுமக்கள் போலீஸாரால் சுட்டு கொல்லப்பட்டனர். இதனையடுத்து தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட உத்தரவிட்டது. அதன்படி ஆலையும் மூடப்பட்டது. …
Read More »நாம் தமிழர் கட்சி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
இயந்திரத்தில் சின்னம் தெளிவாக இல்லை என்று கூறி நாம் தமிழர் கட்சி சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கை அவசரமாக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்து விட்டது. பாராளுமன்ற தேர்தலிலும், சட்டசபை இடைத்தேர்தலிலும் சீமானின் நாம் தமிழர் கட்சி போட்டியிடுகிறது. அந்த கட்சிக்கு ‘கரும்பு விவசாயி’ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர் பெயர், சின்னம் ஆகியவை அச்சிடப்பட்ட பேப்பர்கள் ஓட்டுவது வழக்கம். அப்படி ஓட்டப்பட்ட நாம் தமிழர் கட்சியின் சின்னமான …
Read More »