நாட்டில் இன்று காலை இடம்பெற்ற தொடர்ச்சியான 6 குண்டு வெடிப்பு சம்பவங்களையடுத்து, 7 ஆவது வெடிப்பு சம்பவமொன்று தெஹிவளை பகுதியில் பதிவாகியுள்ளது. அதன்படி குறித்த வெடிப்பு சம்பவமானது தெஹிவளை மிருகக் காட்சிசாலைக்கு அருகில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தினால் இருவர் உயிரிழந்துள்ளதுடன், காயமடைந்தவர்கள் கொழும்பு தெற்கு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்னர். இதேவேளை பாதுகாப்பினை கருத்திற் கொண்டு மிருகக் காட்சிசாலையை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Read More »