ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் தலைவர் 166 படத்தின் “பர்ஸ்ட் லுக்” என்று புகைப்படம் ஒன்று இணையத்தில் கசிந்துள்ளது.
மேலும் இப்படத்தின் வில்லன் பற்றிய தகவல்களும் வைரலாகி வருகிறது.
பேட்ட படத்தின் வெற்றியை தொடர்ந்து ரஜினிகாந்த் அடுத்ததாக ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் அரசியில் கலந்த மசாலா படத்தில் நடிக்கவிருக்கிறார்.
இது ரஜினியின் கேரியரில் 166 -வது படமாக உருவாகவிருக்கிறது.
இப்படத்தை பற்றி எந்தவிதமான அதிகாரபூர்வ தகவல்களும் இன்னும் வெளிவரவில்லை இருந்தாலும் இப்படத்தை பற்றின அப்டேட்ஸ் வந்தவண்ணமாகவே உள்ளது.
இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் மும்பையில் நடைபெற உள்ளதாக ஏற்கனவே சில தகவல்கள் வெளியானது.
மேலும், முதற்கட்ட படப்பிடிப்பு வரும் ஏப்ரல் 10ஆம் தேதி துவங்க உள்ளதால் சமீபத்தில் இப்படப்பிடிப்பிற்கான போட்டோ ஷுட்கள் நடைபெற்றதாகவும் அதில் ரஜினி கலந்து கொண்டதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

ஆதலால், இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியாகும் என்று ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர்.
மேலும் இன்னொரு சுவாரஸ்யம் என்னவென்றால், இப்படத்தில் ரஜினிக்கு வில்லனாக எஸ்.ஜே சூர்யா நடிக்கிறார் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது.

Tamilpriyam | Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamil nadu News | Sri Lankan Tamil News Tamil News,Online Tamil News,Tamil News Live,Tamilnadu News,Oneindia Tamil,live tamil news Portal,online tamil news,Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil,all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology,online tamil news, tamil news portal, tamil actors, tamil actresses, astrology news in tamil, chennai news,