தமிழிசை

15 நாட்களில் தெலுங்கு பேசுவது எப்படி? டீப் திங்கிங்கில் தமிழிசை!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

15 நாட்களில் தெலுங்கு கற்றுக்கொண்டு தெலங்கானா மக்களுடன் சரளமாக உரையாடுவேன் என ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளாராம்.

தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன், சமீபத்தில் தெலுங்கானா மாநில கவர்னராக குடியரசு தலைவரால் நியமனம் செய்யப்பட்ட நிலையில் அவர் கவர்னராக கடந்த ஞாயிற்றுகிழமை பதவியேற்றுக்கொண்டார்.

அதன்பின்னர் வழக்கம் போல் ஆளுநர் மாளிகையில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை சந்தித்து பேசினார்.

ஊழியர்களிடம் கடமையை சரியாக செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டவர் அவர், யோகாவும் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இதன் பின்னர் இன்னும் 15 நாட்களில் தெலுங்கு மொழியை கற்றுக்கொண்டு தெலங்கானா மாநில மக்களுடனும், ஊழியர்களுடனும் சரளமாக பேசிவேன் எனவும் கூறியுள்ளாராம்.

இந்த தகவலை தெலங்கானாவின் ஐ.ஆர்.டி துறை டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட கையோடு, தமிழிசையின் சில புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளது.

About அருள்

Check Also

தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறிய 8,000 பேர் கைது

தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறிய 8,000 பேர் கைது

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!8Sharesதமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறிய 8,000 பேர் கைது கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க …