தமிழகத்தில் உள்ள 38 பாராளுமன்றத் தொகுதிகளில் 71.87 சதவீத வாக்குகள் பதிவாகியிருப்பதாக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்தார். #LokSabhaElections2019 #TNElections #VoterTurnout
தமிழகத்தில் நேற்று 38 பாராளுமன்றத் தொகுதிகள் மற்றம் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெற்றது.
காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. மதுரையில் மட்டும் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது.
வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுது ஏற்பட்ட பகுதிகளிலும், வாக்குப்பதிவு நேரம் நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் உள்ள 38 மக்களவை தொகுதிகளிலும் 71.87 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.
அதிகபட்சமாக தருமபுரி தொகுதியில் 80.49 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. குறைந்தபட்சம் தென்சென்னையில் 56.41 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.
18 சட்டமன்றத் தொகுதிகளைப் பொருத்தவரை 75.57 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.
அதிகபட்சமாக சோளிங்கர் தொகுதியில் 82.26 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார். #LokSabhaElections2019 #TNElections #VoterTurnout