சினிமா திரை உலகில் பிரபலமானவர் நடிகை ராகவி. தற்போது நடிகை ராகவியின் கணவர் தூக்குப்போட்டு உயிரிழந்து உள்ளார் என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
மேலும், நடிகை ராகவியின் கணவர் இறப்பு தற்கொலை முயற்சியா? கொலை முயற்சியா? என போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். இதனைத்தொடர்ந்து வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரயில்வே நிலையம் பகுதியில் உள்ள மரத்தில் தூக்கு போட்டு தொங்கிய ஆண் சடலம் இருப்பதாக சிலர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர்.
இதனையடுத்து ஜோலார்பேட்டை காவல் ஆய்வாளர் பணியில் உள்ள பழனி என்பவர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார். பின் அங்கு இருந்த உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார்கள்.
இந்நிலையில் இறந்த நபர் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. பின் இவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்று தீவிரமாக போலீசார் விசாரிக்க தொடங்கினார்கள்.
அதற்கு பிறகு தான் தெரிந்தது இவர் சென்னை வளசரவாக்கம் பகுதியில் வசித்து வரும் சினிமா துறையில் பிரபலமான நடிகை ராகவியின் கணவர் ‘சசிகுமார்’. பின்னர் ஜோலார்பேட்டை போலீசார் தங்களுக்கு கிடைத்த சடலம் குறித்த தகவலை நடிகை ராகவிக்கு தெரிவித்தார்கள்.
உடனே தகவல் அறிந்து விரைந்து வந்த நடிகை ராகவி போலீசுக்கு கிடைத்த சடலத்தை பார்த்து தன் கணவர் சசிகுமார் தான் என்று அடையாளம் காட்டி உறுதி செய்தார்.
ராகவியின் கணவர் சசிகுமார் சினிமா திரைப்படங்கள் மற்றும் டிவி சீரியலில் ஒளிப்பதிவு செய்யும் கேமராமேனாக பணியாற்றி வந்தவர். இவருக்கு சமீபகாலமாகவே கடன் தொல்லை அதிகமாக இருந்தது.
பின்னர் தான் பணிபுரிந்த ஸ்டுடியோவிருக்கு சொந்தமான கேமராவை அடகு வைத்து விட்டார் என்று சசிகுமார் மீது புகார் கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த ஒன்பதாம் தேதி திடீரென்று இவர் வீட்டை விட்டு வெளியேறினார் என்றும், வெளியேறிய பின்னர் எந்த ஒரு தொடர்பும் இல்லாமல் இருந்தார் என்றும் தெரியவந்தது.
இதையும் பாருங்க :
தீபாவளியன்று எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஏன் தெரியுமா…?
ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் தீபாவளி வாழ்த்து
நவம்பர் இறுதிக்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் – துணை முதலமைச்சர்
இந்நிலையில் சசிகுமாருடன் பணிபுரியும் மகேஷ் என்பவருக்கும், சசிகுமார் இருக்கும் தொழில் ரீதியாக பல பிரச்சனைகள் இருந்து உள்ளது என தெரிய வருகிறது. சில தினங்களுக்கு முன்னர் மகேஷ் என்பவர் சசிகுமாரை ‘கேமரா திருடன்’ என வாட்ஸ் அப்பில் பதிவு செய்துள்ளார் என்று கூறப்படுகிறது.
மேலும், சசிகுமார் இந்த மாதிரி முட்டாள் வேலை செய்ததற்கு இந்த வாட்ஸ் அப் மெசேஜ் தான் என்றும் கூறுகிறார்கள். சசிகுமார் மரணம் குறித்து நடிகை ராகவி போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.
சசிகுமார் மரணம் குறித்து போலீசாரிடம் நடிகை ராகவி கூறியது, என் கணவர் சசிகுமாருக்கு கூட வேலை செய்யும் மகேஷ் உடன் தொழில் ரீதியாக பல பிரச்சனைகள் இருந்தது.
அதோடு சில தினங்களுக்கு முன்னால் என் கணவர் சசிகுமார் பற்றி வாட்ஸ் அப்பில் தரக்குறைவாக விமர்சனம் செய்து வந்திருந்தார் மகேஷ் என்று புகார் அளித்துள்ளார். இது குறித்து போலீசார் மகேஷை தீவிரமாக விசாரித்த வருகிறார்கள்.
மேலும்,சசிகுமார் உடன் பணிபுரிந்த ஒருவர் சசிகுமாரின் கடன் சுமையால் அவர் செய்த வேலை பற்றி சமூக வலைத்தளங்களில் பரவியதானால் மனமுடைந்து சசிகுமார் தூக்குப் போட்டுக் கொண்டார் என்ற தகவலும் உறுதியானது என தெரிந்தது.
ragavi,Serial, Actress Ragavi,சீரியல் நடிகை ராகவி,நடிகை ராகவி,ராகவி கணவர் மரணம்,சினிமா, திரை, உலகில், விஜய் டிவி,vijay tv
இதையும் பாருங்க :
தீபாவளியன்று எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஏன் தெரியுமா…?
ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் தீபாவளி வாழ்த்து
நவம்பர் இறுதிக்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் – துணை முதலமைச்சர்




