இன்று

இன்று நேற்று நாளை 2′ படத்தின் ஹீரோ பெயர் அறிவிப்பு

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

தமிழ் திரையுலகின் முதல் டைம் மிஷின் திரைப்படமான ‘இன்று நேற்று நாளை’ திரைப்படம் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில் முதல் பாகத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்த நடிகர் ஆர்யா தான் இரண்டாம் பாகத்தில் ஹீரோவாக நடிப்பார் என செய்திகள் வெளிவந்தன.

இந்த நிலையில் சற்றுமுன் தயாரிப்பாளர் சி.வி.குமார், ‘இன்று நேற்று நாளை 2’ படத்தின் ஹீரோ, முதல் பாகத்தில் ஹீரோவாக நடித்த விஷ்ணுவிஷால் தான் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இந்த படத்தில் மீண்டும் ஹீரோவாக நடிப்பது மகிழ்ச்சி என விஷ்ணு விஷாலும் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

முதல் பாகத்தை இயக்கிய இயக்குனர் ரவிகுமார் தற்போது சிவகார்த்திகேயன் நடித்து வரும் படத்தை இயக்கி வருவதால் இந்த படத்தை அவருடைய உதவியாளர் கார்த்திக் இயக்கவுள்ளார்.

திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் ஜிப்ரான் இசையில் தினேஷ் குமார் ஒளிப்பதிவில் உருவாகவிருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் முதல் தொடங்கவுள்ளது

முதல் பாகம் போலவே இந்த படத்திலும் டைம் மிஷின் கதை தான் என்றும், இந்த படத்தின் நாயகியாக நடிக்க முதல் பாக நாயகி மியா ஜார்ஜிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் படக்குழுவினர் தெரிவித்தனர்.

மேலும் முதல் பாகத்தில் முக்கிய வேடத்தில் நடித்த கருணாகரன் இந்த படத்திலும் நடிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது

About அருள்

Check Also

பட வாய்ப்புக்காக பாலியல் சீண்டல் நடக்கிறது - அனுஷ்கா

பட வாய்ப்புக்காக பாலியல் சீண்டல் நடக்கிறது – அனுஷ்கா

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!2Sharesபட வாய்ப்புக்காக பாலியல் சீண்டல் நடக்கிறது – அனுஷ்கா மாதவனுடன் அனுஷ்கா நடித்துள்ள நிசப்தம் படம் அடுத்த …