கொரோனா பாதிப்பு

கொரோனா பாதிப்பு அபாயம்: 17வது இடம் பிடித்த இந்தியா!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

கொரோனா பாதிப்பு அபாயம்: 17வது இடம் பிடித்த இந்தியா!

கொரோனா வைரஸ் பரவும் அபாயம் இருக்கும் நாடுகளில் இந்தியா 17வது இடத்தில் இருப்பதாகவும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

சீனாவில் கொரோனா வைரஸ் தீவிரமடைந்து வருகிறது. கொரோனா வைரஸ் தாக்கத்தால் இதுவரை 900-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ள நிலையில், பல்லாயிரக் கணக்கான மக்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா பாதிப்பால் உயிரிழப்புகள் தினந்தோறும் அதிகரித்து வரும் நிலையில் வைரஸ் பரவுவதை தடுக்க முடியாமல் சீன அரசு திணறி வருகிறது.

இந்நிலையில் இந்தியா உள்ளிட்ட 20 நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவும் அபாயம் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவுக்கு வெளியே தாய்லாந்து, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகள் உள்பட 20 நாடுகளில் கொரோனா வைரஸ் பரவும் அபாயம் இருப்பதாகவும், அதில் இந்தியா 17வது இடத்தில் இருப்பதாகவும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது. இந்த ஆய்வு இந்தியர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்றைய ராசிப்பலன் 14 மார்கழி 2019 சனிக்கிழமை – Today rasi palan – 14.12.2019

பிறப்புறுப்பை பிடித்து துன்புறுத்திய ஆசிரியர்கள் – மாணவர் மருத்துவமனையில் அனுமதி!

Tamil News
Tamilnadu News
World Tamil News

About அருள்

Check Also

இத்தாலியில் நேற்று 683 பேர் கொரோனவால் பலி

இத்தாலியில் நேற்று 683 பேர் கொரோனவால் பலி

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!1Share  இத்தாலியில் நேற்று 683 பேர் கொரோனவால் பலி சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட வைரஸ் தற்போது ஐரோப்பிய நாடுகளில் …