பிறப்புறுப்பை பிடித்து துன்புறுத்திய ஆசிரியர்கள் – மாணவர் மருத்துவமனையில் அனுமதி!

0
59
மாணவர்
பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 4
    Shares

மாணவரின் பிறப்புறுப்பை பிடித்து ஆசிரியர்கள் துன்புறுத்தியதில் மாணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் கேந்திரிய வித்யாலயா பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வரும் மாணவர் ஒருவர் வகுப்பறையில் அதிகம் சேட்டை செய்த்தாக கூறப்படுகிறது.

மேலும் அவர் பள்ளிக்கு செல்போன் எடுத்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஆசிரியர்கள் மாணவரை தண்டிக்க முடிவெடுத்துள்ளனர்.

அதன்படி வகுப்பறையின் கதவைப் பூட்டிவிட்டு பள்ளி முதல்வர் உட்பட 4 ஆசிரியர்கள் இணைந்து மாணவரின் பிறப்புறுப்பை பிடித்து துன்புறுத்தியுள்ளனர். இதனால் அவரது பிறப்புறுப்பில் அதிக வலி ஏற்பட்டு மாணவர் துடித்துள்ளார்.

இதையடுத்து அவரை தற்போது கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் பெற்றோர்களிடையேயும், மாணவர்களிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் பாருங்க :

இலங்கை

தமிழகம்

இன்றைய ராசிபலன்

உலக செய்திகள்