பிரதமர்

இலங்கையில் குண்டுவெடிப்பு தாக்குதல் மன்னிப்பு கேட்ட பிரதமர்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இருப்பிடமான அலரிமாளிகை அருகே இரு தற்கொலை அங்கிகள் கண்டுபிடிப்பு எனத்தகவல் வெளியாகிறது.

இலங்கையில் அம்பறை சம்மாந்துறை பகுதியில் வெடிகுண்டு மூலப்பொருட்கள் பறிமுதல் செய்த போலீஸார் தற்போது 7 பேரை கைது செய்துள்ளனர்.

வெடிகுண்டு தயாரிப்பதற்கான டெட்டனேட்டர்கள், எலக்ட்ரானிக் பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மேலும் ஐஎஸ் பயங்கரவாதிகள் மீண்டும் 2வது முறையாக தாக்குதல் நடத்தக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிரதமர் ரணில் கூறியுள்ளதாவது :

நாட்டின் பொருளாதாரம் மற்றும் தேவாலயங்களில் மறுசீரமைப்பு செய்ய உறுதி ஏற்கிறேன்.

சர்வதேச நாடுகளின் உதவியுடன் பயங்கரவாதத்தை ஒழிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.

கொடிய தாக்குதலில் இருந்து மக்களை காக்க தவறியதற்காக பொறுப்பேற்று மன்னிப்பு கேட்கிறேன் இவ்வாறு கூறியுள்ளார்.

About அருள்

Check Also

தாக்கப்பட்டாரா அர்ச்சுனா எம்.பி – நாடாளுமன்றத்தில் களேபரம்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேரா தம்மைத் தாக்கியதாக யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றுக்கு தெரிவாகியுள்ள வைத்தியர் ராமநாதன் …