பிறவிலேயே வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி சிறுவன் ஒருவன் நடிகர் விஜய்யின் வசனத்தைக் கேட்டு கொஞ்சம் கொஞ்சமாக குணமாகி வருவதாக வெளிவந்துள்ள செய்தி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
கேரள மாநிலத்தில் உள்ள இடுக்கி என்ற பகுதியில் செபாஸ்டியன் என்ற சிறுவன் பிறவியிலேயே வாய் பேச முடியாமல் இருந்து வந்துள்ளார்.
அந்த சிறுவனுக்கு பல மருத்துவர்கள் சிகிச்சை அளித்தும் குணமாகவில்லை இந்த நிலையில் தற்செயலாக ஒரு முறை விஜய்யின் ’செல்பிபுள்ள’ ரிங்டோனை கேட்டவுடன் சிறுவனிடம் சிறிய மாற்றம் ஏற்படுவதை பெற்றோர்கள் கண்டனர்.
உடனடியாக இதுகுறித்து சிறுவனின் பெற்றோர்கள் மருத்துவரிடம் கூற, அதனை தொடர்ந்து விஜய் படங்கள், விஜய்யின் பஞ்ச் வசனங்கள், விஜய்யின் பாடல்கள், விஜய் நடன காட்சிகள் ஆகியவற்றை செபாஸ்டியன் முன் போட்டுக் காட்டியுள்ளனர்.
இந்த படங்களையும் பாடல்களையும் பஞ்ச் வசனங்களை கேட்ட அந்த சிறுவன் மெல்ல மெல்ல எழுந்து நடப்பதாகவும் பேச முயற்சி செய்வதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
நடிகர் விஜயின் படங்கள் மூலம் பிறவியிலேயே மாற்றுத் திறனாளியாக இருந்த சிறுவன் ஒருவன் கொஞ்சம் கொஞ்சமாக குணமடைய தொடங்கியது அந்த பகுதியில் உள்ள அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்தது மட்டுமின்றி பெற்றோர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
இதையும் பாருங்க :
மோசமான நிலையில் அனுமதிக்கப்பட்ட பரவை முனியம்மா
சுஜித் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய பிக் பாஸ் பிரபலம்.
மீண்டும் உச்சத்தை தொட்ட வெங்காய விலை!
ஜெர்மன் உதவியுடன் தமிழகத்தில் மின்சார பேருந்துகள்… ரூ.1,580 கோடி முதலீடு