தற்போது நிலவி வரும் பருவ நிலை மாற்றத்தால் நம்மில் பலருக்கு உடலில் அதிக உஷ்ணம் ஏற்படுகிறது. நீண்டநேரம் வெளியில் பயணங்கள் மேற்கொள்வோருக்கும், அதிக நேரம் நாற்காலி, சோபா மீது நிலையாக உட்கார்ந்திருப்பதாலும் ஏற்படுகிறது. இதனால் நம் தலை முடி முதல் கால் வரை உள்ள அனைத்தும் ஆரோக்கியத்தை இழக்கிறது, முகப்பரு, தோல் வியாதிகள், தலை முடி உதிர்தல், வயிற்று வலி, உடல் எடை குறைதல் போன்ற எரிச்சலூட்டும் நிகழ்வுகளும் ஏற்படுகிறது.
இதை சரி செய்ய நம் சித்தர்கள் நீண்டகாலத்துக்கு முன்பே வகுத்துத் தந்த ஓர் எளிய வழிமுறையை இங்கு அறிந்து கொள்ளலாம். இதில் பலன் பெறுவதற்கு இரண்டே நிமிடங்கள் போதும்.
தேவையான பொருள்கள் :
1.நல்லெண்ணெய்
2.பூண்டு
3.மிளகு
செய்முறை:
நல்லெண்ணெய்யை ஒரு குழிக் கரண்டியில் தேவையான அளவு எடுத்து கொண்டு அதை மிதமான சூட்டில் சூடு படுத்தவும். எண்ணெய் காய்ந்ததும் அதில் மிளகு, தோல் உரிக்காத பூண்டை போட்டு சில நிமிடத்தில் சூடானதும் அடுப்பில் இருந்து இறக்கி ஆறவிட வேண்டும்.
ஆறிய எண்ணெய்யை இரு கால்களின் பெருவிரல் நகத்தில் மட்டும் பூசி விட வேண்டும். 2 நிமிடங்கள் கழித்து உடனே காலை கழுவி விட வேண்டும். இதைச் செய்யும் போதே உங்கள் உடம்பு குளிர்ச்சி அடைவதை உணர முடியும். 2 நிமிடத்துக்கு மேல் இந்த எண்ணெய் கால் விரலில் சேர்ந்திருக்கக் கூடாது. சளி, காய்ச்சல் உள்ளவர்கள் இதனை முயற்சி செய்ய வேண்டாம். மிகுந்த மன அழுத்தம் , உஷ்ண உடம்பு உள்ளவர்கள் இதை கட்டாயம் செய்து பயன்பெறுங்கள். இதன் வாசனை தெய்வீகத் தன்மை கொண்டதாக உணர்வீர்கள்.
அந்த காலத்தில் சித்தர்கள், குழந்தை இல்லாத ஆண்கள் தங்களிடம் குழந்தை வேண்டும் என்று வந்தால் மேல் குறிப்பிட்ட மருத்துவ முறையையே சொல்வார்களாம். ஏனெனில் இதனை செய்வதன் மூலம் ஆண்களின் விந்து விருத்தி அடைந்து மூன்று மாதத்தில் குழந்தை பிறக்குமாம். இன்றைய காலகட்டத்தில் நீண்டநேரம் அமர்ந்தபடியே வேலை பார்க்கும் ஐடி துறை ஊழியர்களில் பலருக்கும் புத்திர பாக்கியம் இல்லாது போவதை கேள்விப்பட்டிருக்கலாம்.
உடல் உஷ்ணத்தினால் உள்ளுக்குள் விந்து சுரப்பு குறைவதோடு விந்தணுக்களும் வலுவிழந்து போய் விடுகின்றன. நவநாகரிக டைட்டான ஜீன்ஸ் பேண்டுகளை அணிவதாலும் இந்த அவலம் ஏற்படுகிறது. ஆனால் அப்படிப்பட்டவர்களுக்கு இந்த தைல வைத்தியம் அரிய வரப்பிரசாதமாகும். ஐ.டி. ஊழியர்கள், உடல் உஷ்ணத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் காலை குளிக்க போகும் முன் 1 நிமிடத்துக்கு எண்ணெயை தடவினால் மன அழுத்தம் நீங்கும். மலட்டுத்தன்மை குறைபாடு நீங்கும். சிறியவர்களாக இருந்தால் வாரத்தில் இருமுறை இதனை செய்யலாம்.
Tamilpriyam | Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamil nadu News | Sri Lankan Tamil News Tamil News,Online Tamil News,Tamil News Live,Tamilnadu News,Oneindia Tamil,live tamil news Portal,online tamil news,Movie News in tamil , Sports News in Tamil,  Business News in Tamil,all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology,online tamil news, tamil news portal, tamil actors, tamil actresses, astrology news in tamil, chennai news,