அரசியல்

அரசியல் கட்சியில் இனைய போகிறாரா மீரா. புகைப்படத்தை கண்டு ஷாக்கான ரசிகர்கள்.

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நிறைவடைந்தது.

கடந்த இரண்டு சீசனை விட இந்த சீசன் என்பதால் பல்வேறு சர்ச்சையான விஷயங்கள் நடந்தேறியது.

அதற்கு முக்கிய காரணமே இந்த சீசனில் தான் பல்வேறு சர்ச்சையான போட்டியாளர்கள் கலந்து கொண்டிருந்தார்கள்.

அந்த வகையில் மீரா மீதுனும் ஒருவர். மாடல் அழகியான இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற மிஸ் இந்தியா அழகிப் போட்டியில் பட்டத்தை வேண்டியிருந்தார்.

ஆனால், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அழகிப் பட்டத்தை தவறாக பயன்படுத்தி பல்வேறு மோசடி செய்ததால் இவரிடமிருந்து அழகி பட்டம் பறிக்கப்பட்டது.

மாடல் அழகி மட்டுமல்லாமல் மீரா மிதுன் 8 தோட்டாக்கள், தானாசேர்ந்தகூட்டம் போன்ற படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

ஆனால், இவர் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தது அழகிப்போட்டி சர்ச்சை மூலமாகத்தான்.
அரசியல்

அரசியல்

அரசியல்

அரசியல்
அதுமட்டுமல்லாமல் ஜோ ,மைக்கேல் என்பவர் இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னதாகவே இவர் சமூக வலைதளத்தில் மிகவும் சர்ச்சையான ஒரு நபராக பேசப்பட்டு வந்தார்.

இப்படிப்பட்ட நிலையில்தான் மீராமிதுன் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார். ஆனா,ல் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்ற பின்னர் இவர் மேலும் சர்ச்சையில் சிக்கி இருந்தார்.

தர்ஷன் தன்னை காதலிப்பதாக சொன்னது, சேரன் தன்னிடம் தவறாக நடந்து கொண்டார் என்று சொன்னது என்று பிக்பாஸ் வீட்டில் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி இருந்தார் மீராமிதுன். அதேபோல பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பின்னரும் இவர் அடங்குவதாக இல்லை.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய மீரா தனது சமூக வலைத்தளத்தில் பிக்பாஸ் குறித்தும் அதில் பங்குபெற்ற போட்டியாளர்கள் குறித்தும் பல்வேறு சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்து வந்தார்.

மேலும், பிக்பாஸ் வீட்டில் இருந்த ஆண்கள் அனைவரும் தன்னிடம் நெருக்கமாக பழக முயன்றதாகவும் அதில் ஒருவர் தன்னிடம் காதலைச் சொன்னதாகவும் தெரிவித்திருந்தார். மேலும், பிக் பாஸ் பட்டத்தை பட்டத்தை வென்ற முகென் பற்றி பல்வேறு விஷயங்கள் இருக்கிறது.

ஆனால், அதைப் பற்றி சொல்லி இருந்தால் அவர் பட்டத்தை வென்று இருக்கமாட்டார் என்றும் சர்ச்சையைக் கிளப்பி இருந்தார் மீரா.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் நம்ம வீட்டு பிள்ளை, அக்னி சிறகுகள் என்று இரு படங்களில் கமிட்டாகி இருந்தார். மேலும், நம்ம வீட்டு பிள்ளை படத்தில் ஒரு சில காட்சிகளில் கூட நடித்திருந்தார்.

ஆனால், பிக்பாஸ் வீட்டில் இவரது லட்சணத்தை கண்ட பின்னர் இவர் நடித்த காட்சிகள் நீக்கப்பட்டது. அதேபோல அக்னிசிறகுகள் படத்தில் இருந்து நீக்கப்பட்டு விட்டா.ர் இவருக்கு பதிலாக கமலின் இளைய மகள் அக்ஷராஹாசன் கமிட் செய்யப்பட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த மீரா மிதுன் அதை கடுமையாக விமர்சித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். இப்படி பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி இருந்த மீரா சமீபத்தில் சரவணன் தனது தந்தைக்காக கட்டிய கோவிலின் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டார்.

இந்த விழாவில் அதிமுக பிரமுகர்கள் சிலரும் வந்து இருந்தார்கள். அவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை மீராமிதுன் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார் அதில், அதிமுக தலைவர்களான ஆர் இளங்கோவன் மற்றும் ஓமலூர் சட்டமன்ற உறுப்பினர், ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினர், கழக செயலாளர்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி என்று பதிவிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மீரா, அரசியலில் வரப் போகிறாரா என்று கலாய்த்து வருகிறார்கள். அதேபோல பிக்பாஸ் வீட்டில் இவர் செய்த அரசியல் பார்த்தாதான் என்றும் கேலி செய்து வருகிறார்கள்.

https://twitter.com/meera_mitun/status/1190225766669156352?s=20

இதையும் பாருங்க :

சுஐித் மரணம்..வேதனை அளிக்கிறது இருந்து..உலகிற்கு…பாடம் கற்பிக்காமல் இறந்து பாடம் கற்பித்துள்ளான்

வலுவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

கவலைக்கிடமான நிலையில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர்

ஒரு கோடி இழப்பீடு, அரசு வேலை: சுஜித் குடும்பத்திற்கு வழங்க திருமாவளவன் கோரிக்கை!

About அருள்

Check Also

பிக்பாஸ்

இரண்டு வருடம் கழித்து முதல் படத்தை வெளியிடும் பிக்பாஸ் டைட்டில் வின்னர்!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!21Sharesகமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்றவர்கள் எல்லாம் திரையுலகில் ஆஹா ஓஹோ என்று …