இரண்டு வருடம் கழித்து முதல் படத்தை வெளியிடும் பிக்பாஸ் டைட்டில் வின்னர்!

0
24
பிக்பாஸ்
பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 21
    Shares

கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்றவர்கள் எல்லாம் திரையுலகில் ஆஹா ஓஹோ என்று வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

கமல்ஹாசன் உள்பட அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலரும் இதையே பில்டப் செய்து கூறினார். ஆனால் பிக் பாஸ் சீசன் 1 டைட்டில் வின்னரான ஆரவ் நடித்த முதல் படமே தற்போதுதான் வெளிவரவுள்ளது

கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆரவ் ஒருசில படங்களில் நடித்து வந்த போதிலும் அவர் நடித்த முதல் படமான ’மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ்’ என்ற திரைப்படம் வரும் 29ஆம் தேதி வெளிவரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அஜித் நடித்த ’அமர்க்களம்’ ’அட்டகாசம்’ ’அசல்’ போன்ற படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் சரண் இயக்கியுள்ள இந்த படம் ஒரு முழுநீள காமெடி படம் என்று கூறப்படுகிறது

சைமன் கிங் இசையில், குகன் ஒளிப்பதிவில் கோபிகிருஷ்ணா படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை சுரபி பிலிம்ஸ் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தின் ரிலீஸ் தேதி நவம்பர் 29 என்பதை ஆரவ் தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்

ஏற்கனவே அவர் ராஜபீமா மற்றும் மீண்டும் வா அருகில் வா என்ற ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. இந்த படம் வெற்றியடைந்தால் தமிழ் சினிமாவில் அவருக்கு என்று ஒரு இடம் கிடைக்க வாய்ப்புள்ளது.

ஆனால் அதே நேரத்தில் சுமாராக ஓடினால் அவருக்கு தமிழ் திரையுலகில் எதிர்காலம் இருக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

இதையும் பாருங்க :

இலங்கை

தமிழகம்

இன்றைய ராசிபலன்

உலக செய்திகள்