வங்கக் கடலில்

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

அந்தமான் அருகே வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் வெளியிட்டுள்ள செய்தியில், புதிய காற்றழுத்த தாழ்வுநிலை வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து இரண்டு நாட்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் வாய்ப்பு உள்ளது.

எனவே சூறைக்காற்று வீசும் என்பதால் மீனவர்கள் இன்று அந்தமான் கடற்பகுதிக்கும் நாளை, நாளை மறுதினம் மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதிக்கும் மீனவர்கள் செல்ல வேண்டாமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் வெப்பச்சலனம் காரணமாக தென்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

இதையும் பாருங்க :

மோசமான நிலையில் அனுமதிக்கப்பட்ட பரவை முனியம்மா

சுஜித் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய பிக் பாஸ் பிரபலம்.

மீண்டும் உச்சத்தை தொட்ட வெங்காய விலை!

ஜெர்மன் உதவியுடன் தமிழகத்தில் மின்சார பேருந்துகள்… ரூ.1,580 கோடி முதலீடு

About அருள்

Check Also

தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறிய 8,000 பேர் கைது

தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறிய 8,000 பேர் கைது

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!8Sharesதமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறிய 8,000 பேர் கைது கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க …