பிக்பாஸ்

பிக்பாஸ் சரவணனின் சோகக்கதை

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

பிக்பாஸ் வீட்டில் கடந்த இரண்டு நாட்களாகவே சோகம் நெஞ்சை பிழிந்து வரும் நிலையில் நேற்று சேரன், மதுமிதா, தர்ஷன் மற்றும் சரவணன் ஆகியோர் தங்கள் வாழ்க்கையில் நடந்த சோகக்கதையை தெரிவித்தனர்.

அதில் சரவணன் கதையில் கொஞ்சம் சோகம் அதிகமாக இருந்தது. சொந்தப்படம் எடுத்து கடனாளியான பின்னர் காதலித்த பெண்ணை திருமணம் செய்யக்கூட தன்னிடம் பணம் இல்லை என்றும் தன்னுடைய காதலிதான் தாலி உள்பட எல்லாவற்றையும் வாங்கி ரூ.50 ஆயிரம் செலவு செய்து தன்னை திருமணம் செய்து கொண்டதாகவும் கூறினார்

மேலும் தனக்கு குழந்தை இல்லை என்பதால் தனது தாயார் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள கட்டாயப்படுத்தியதாகவும், அந்த திருமணத்திற்கும் தனது முதல் மனைவியே செலவு செய்ததாகவும் உருக்கமாக தெரிவித்தார்.

மேலும் தனது உடன்பிறந்த அண்ணன், தம்பி ஆகிய அனைவரும் தன்னை ஏமாற்றிவிட்டதாகவும், பணம் தான் இந்த உலகில் பிரதானம் என்றும் பணம் இல்லை என்றால் ஒன்றுமே இல்லை என்றும் என்னைப்போல் முட்டாளாக இல்லாமல் பணத்தை அனைவரும் சேர்த்து வைத்து பாதுகாப்பாக வாழுங்கள் என்றும் சரவணன் அறிவுரை கூறினார்

About அருள்

Check Also

பிக்பாஸ்

இரண்டு வருடம் கழித்து முதல் படத்தை வெளியிடும் பிக்பாஸ் டைட்டில் வின்னர்!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!21Sharesகமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்றவர்கள் எல்லாம் திரையுலகில் ஆஹா ஓஹோ என்று …