ஆயுத பூஜையொட்டி 2வது நாளாக சென்னையில் இருந்து சிறப்பு பேருந்து இயக்கம்

0
17
ஆயுத பூஜை
பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
ஆயுத பூஜையொட்டி 2வது நாளாக சென்னையில் இருந்து சிறப்பு பேருந்து இயக்கம்

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்து சென்னையில் வசிக்கும் மக்கள் ஆயுத பூஜை பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாட வசதியாக சிறப்பு பேருந்துகள் சேவை நேற்று தொடங்கியது.

இந்தநிலையில், 2வது நாளாக 765 பேருந்துகள் இன்று இயக்கப்படுகிறது. 4 நாட்கள் தொடர் விடுமுறை மக்கள் சொந்த ஊர் செல்ல அனைத்து ஏற்பாடுகளை போக்குவரத்து துறை செய்துள்ளது.

தாம்பரம், பூவிருந்தவல்லி உள்ளிட்ட பேருந்து நிறுத்தமிடங்களிலில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

ஞாயிற்றுக்கிழமை வரை மொத்தம் 6,145 பேருந்துகளை தமிழக போக்குவரத்துறை இயக்குகிறது.

இதேபோல் மறு மார்க்கமாக 8ம் தேதி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் சென்னைக்கு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

பாகிஸ்தான் பொருளாதாரத்தை உயர்த்த ராணுவ தளபதி தீவிரம்