திருச்சி அருகே ஆழ்துளை குழியில் சிக்கி மீட்ப்பட்டுவிட்டுவிட மாட்டோமாஎன்று ஏங்கி வரும் சுஜித்திற்காக தான் தற்போது தமிழகமே பிரார்த்தனை செய்தி வருகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை மாலை திருச்சி நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 2 வயது சிறுவன் சுஜித் கடந்த 3 நாட்களுக்கும் மேலாக சிக்கி தவித்து வருகிறான்.
சுஜித்தை மீட்கும் மீட்கும் பணி கடந்த பல மணி நேரத்திற்கும் மேலாக நடந்து வருகிறது. இதுவரை மேற்கொண்ட மீட்பு நடவடிக்கைகள் கைவிட்டுவிட தற்போது 82 அடியில் சிக்கி இருக்கும் சுஜித்தை, 110 அடியில் குழி தோண்டி, சுரங்கம் அமைத்து மீட்பதற்கான முயற்சிகள் நடந்து வருகிறது.
மேலும், சிறுவன் சுஜித் விழுந்த இடத்துற்கு அருகே தோண்டப்படும் பகுதியில் 98 அடி வரை குழி தோண்டி பின்பு அதை சுஜித் விழுந்த பள்ளத்தோடு இணைக்கப்படும் என்று வருவாய் நிர்வாக ஆணையர் ஜே.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்கள் பலரும் சுஜித் மீண்டு வர வேண்டும் என உருக்கமாக கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால், இத்தனை நிலவில் நீர்,செவ்வாயில் குடியிருப்பு,எதற்காக இத்துணைக் கண்டுபிடிப்புகள்? நூறு அடியில் உயிரொன்று ஊசலாடுகையில் விஞ்ஞானமும் நாமும் எதற்கு? என்பது தான் மக்களின் கேள்வியாக இருந்து வருகிறது.
சுஜித்தை மீட்க பல தரப்பினரும் பரிந்துரைத்த வண்ணம் உள்ளனர். மேலும், பலூன் முறை மற்றும் ரிக் இயந்திரம், போர்வெல் மிஷினை வைத்து குழி தோண்டும் முறை என பல்வேறு வழிமுறைகளை சமூக வலைத்தளத்தில் பலரும் பதிவிட்ட வண்ணம் இருக்கின்றனர்.
சுஜித் விரைவில் காப்பற்றப்பட வேண்டும் என்று பல்வேறு மக்களும் பிரார்த்தனை செய்து வரும் நிலையில், தமிழ் சினிமாவில் உள்ள ரஜினி, கமல் என்று பலரும் தங்களது வருத்தங்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற காயத்ரி ரகுராம், குழந்தையின் தாயை குறை கூறி ட்வீட் செய்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
https://twitter.com/gayathriraguram/status/1188107657581752320?s=20
https://twitter.com/gayathriraguram/status/1188112023608942592?s=20
இதுகுறித்து ட்வீட் செய்துள்ள அவர், இது முதல் தவறும் கிடையாது ஒட்டுமொத்த தவறும் கிடையாது. இது அடிக்கடி ஏற்படும் தவறுதான். பெரியவர்கள் செய்யும் தவறுகளால் இன்று குழந்தைகள் பாதிப்படைகிறார்கள்.
சரியான இயந்திரங்களை கண்டுபிடிப்பதற்கு முன்னதாக பெற்றோர்களும் பொதுமக்களும் பொறுப்போடு இருக்க வேண்டும் . சுஜித்திற்காக பிரார்த்தனை செய்கிறேன் என்று பதிவிட்டுள்ளார். மேலும், மற்றொரு பதிவில் கவனக்குறைவாக இருக்கும் மக்களுக்கு முதலில் ஒரு இயந்திரத்தை கண்டுபிடிக்க வேண்டும்.
ஆழ்துளை கிணறுகளை மூட வேண்டும் என்பதை அவர்கள் உணர வேண்டும். மீண்டும் இது போல குழிகளிலும் குழந்தைகளை காப்பாற்ற இயந்திரங்களை கண்டுபிடிக்க வேண்டுமா? அல்லது இரண்டாயிரம் செலவுசெய்து ஆழ்துளை கிணறுகளை போட மாட்டார்களா ? என்று பதிவிட்டுள்ளார் காயத்ரி ரகுராம்.
https://twitter.com/gayathriraguram/status/1188144050328596480?s=20
காயத்ரி ரகுராமன் இந்த பதிவிற்கு ஒரு சிலர் வரவேற்பே தெரிவித்தாலும், ஒரு சிலரோ ஒரு குழந்தையின் வலியும் வேதனையும் ஒரு தாயாக இருந்தால் தான் உங்களுக்கு தெரியும். சுஜித்தின் இந்த நிலைமைக்கு சரியான இயந்திரம் கண்டு பிடிக்கப்படாத அரசு தான் காரணம் என்று திட்டி தீர்த்து வருகின்றனர்.
அதற்கு பதிலளித்த காயத்ரி ரகுராம் ,ஒரு குழந்தையின் வலியை உணர எனக்கு ஒரு குழந்தை இருக்க வேண்டுமா அல்லது நான் தாயாக இருக்க வேண்டுமோ என்று அவசியமில்லை. நானும் ஒரு மனிதன் தான்.
ஆனால், இதுபோன்ற தவறுகள் அடிக்கடி நடப்பதற்கு யாருடைய தவறு காரணம்? அந்த குழந்தை குழியில் மாட்டிக்கொண்டு தவிப்பதற்கு காரணம் யார்? ஏந்திரம் கண்டுபிடிக்காமல் இருப்பதுதான் இதற்கு காரணமா? இல்லை ஆழ்துளை கிணறுகளுக்கு மூடி போடாமல் இருப்பது காரணமா ? என்று ட்விட் செய்துள்ளார் காயத்ரி
இதையும் பாருங்க :
Child Surjith Rescue Live Updates | குழந்தை சுர்ஜித் மீட்பு பணிகள் தீவிரம்
Tamilpriyam | Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamil nadu News | Sri Lankan Tamil News Tamil News,Online Tamil News,Tamil News Live,Tamilnadu News,Oneindia Tamil,live tamil news Portal,online tamil news,Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil,all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology,online tamil news, tamil news portal, tamil actors, tamil actresses, astrology news in tamil, chennai news,